lxii


பாணர் வருந்தியதும் அதிகமானெடுமானஞ்சி பகைவர்க்கஞ்சி யொளித்ததுங் கூறியது; (அகம். 115) பெருஞ்சேரலாதன் மாந்தை முற்றத்து நிதி கொட்டி யிரவலர்க்களித்த கதை கூறியது; (அகம். 127) ஆயுத பூசை செய்யும் வழக்குக் கூறியது; (அகம். 186) கண்ணனெழினி கதை கூறியது. (அகம். 196) பாண்டியனது கொற்கையில் முத்தும் சங்கு மெடுத்தல் கூறியது; (அகம். 201) மத்தி யென்பவன் எழினியென்பவனுடைய பல்லைப் பிடுங்கி வெண்மணிவாயிற் கதவிலழுத்திய கதை கூறியது; (அகம். 211) (வெண்மணி நாகபட்டினம் தாலூகாவிலுள்ளதோரூர்) உதியஞ்சேரல் பாரதப்் போரிற் சோறளித்தபொழுது கூளிச் சுற்றஞ் சூழ்ந்திருந்த கதை கூறியது; (அகம். 233) சங்கநிதியின் சிறப்பு, கோசர் பொதியமலை, மோகூரிற் புதிய மோரியரின் தேருருள் குறைத்த கதை - இவற்றைக் கூறியது; (அகம். 251) வேங்கடத்தைப் புகழ்ந்தது; (அகம். 265) வடுகர்போந்தமை கூறியது; (அகம். 281) புல்லியின் வேங்கடம், வடுகரின் ஆரவாரங் கூறியது. (அகம். 295) புல்லிநன்னாட்டைப் புகழ்ந்தது; (அகம். 311) பாணனன்னாட்டுப் புகழ்ச்சி கூறியது; (அகம். 325) சேரலாதன் கடம்பு முதல் தடிந்தது கூறியது; (347) நன்னனது கொடைச் சிறப்பும் அவனது ஏழிற் குன்றச் சிறப்புங் கூறியது; (அகம். 349) சேரலனது வெளியம், புல்லியின்மலை-இவற்றைப் பாராட்டிக் கூறியது; (அகம். 359) புல்லியின் வேங்கடச் சிறப்புக் கூறியது; (அகம். 3") வடுகர் முனையிற் கட்டி யென்பவனது நாட்டைக் கூறியது; (குறு. 11) சேரலனது கழுமலத்தைச் சோழன் வென்ற கதை கூறியது. (நற். 14) சேட்படுத்த வழித் தலைவன் புலம்புவதாகக் கூறியதைக் கேட்டோரு மிரங்குவர்; (நற். 75) இவர் பாடிய நற். 75 ஆம் பாட்டு ஒன்றொழிய ஏனைய வெல்லாம் பாலைத்திணையே. இவர் பாடியருளினவாக நற்றிணையில் இரண்டு (14, 75) பாடல்களும், குறுந்தொகையிலொன்றும் அகத்தில் இருபத்தாறும் திருவள்ளுவ மாலையிலொன்றுமாக முப்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
157. மாறோக்கத்து நப்பசலையார்

    மாறோக்கம் - கொற்கையைச் சூழ்ந்த தொரு நாடு. பசலை - மகளிர் கணவனைப் பிரிந்த காலத்து அவர்க்கு முன்புள்ள நெற்றியினொளிகெட்டுக் கண்ணாடியில் வாயினா லூதியபொழுது ஆவிபடர்ந்து ஒளி மழுங்குவது போல வேறுபட்டுக் காட்டுந்தன்மை. நற்றிணை 304 ஆம் பாட்டில் "மணிமிடை பொன்னின் மாமை சாயவெ, னணிநிறஞ் சிதைக்குமார் பசலை" என்று பசலையினியற்கையைத் தெளியக் கூறியவதனால் நப்பசலையா ரெனப்பட்டார். ந-சிறப்புப்பொருளுணர்த்தும் இடைச் சொல். இவர் பெண்பாலர்; இவரது இயற்பெயர் புலப்படவில்லை. இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது போர்வெற்றியைப் புனைந்து பாடியுள்ளார்; (புறம். 37) மற்றும் அவனது கொடை முதலாயினவற்றைச் சிறப்பித்து இயன்மொழி கூறினார். (புறம். 39) பின்பு அவனிறந்தபொழுது இரங்கிக் கூறிச் சென்றார்; (புறம். 226) மலையமான் திருமுடிக்காரியிடஞ் சென்று பரிசிற்றுறை பாடிப் பரிசில் பெற்றனர்; (புறம். 126) முற்கூறிய காரியின்மகன் சோழியவேனாதி திருக்கண்ணனைப் புகழ்ந்து அரசவாகை பாடினர்; (புறம். 174)இவர் கபிலரைப் பெரிதும் புகழ்ந்துளார்; (புறம். 126, 174) குறிஞ்சியையும் பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக