| "வஞ்சியர் குலபதி யெழினி வகுத்த இயக்கர் இயக்கியரோடு |
| எஞ்சிய அழிவு திருத்தி எண்குண இறைவனை மலைவைத்தான் |
| அஞ்சிதன் வழிவரும் அவன்முதல் இகலதி கன வகன நூல் (?) |
| விஞ்சையர் தகைமையர் காவலன் விடுகா தழகிய பெருமாளே" |
என்னுஞ் செய்யுளாற் புலப்படுகின்றது.
2. அருமன்
இவன் ஒரு செல்வன். சிறுகுடியென்னு மூரிலே வழிவழிச் செல்வமுடைய மரபிலே தோன்றியவன்; எக் காலத்தும் வருநர்க்கு வரையாது சோற்றுணவு கொடுப்பவன்; இவன் வீட்டில் நாள்தோறும் தெய்வத்துக்கு படைத்துப் போடும் பலியுணவை உண்ணவேண்டிக் காக்கைகள் கூடியிருப்பதை நக்கீரர் வெகு சிறப்பாக எழுதுகிறார்; (நற். 367) இவனுடைய சிறுகுடி யென்னுமூர் மிகப் பழைமையுடையதாகக் கொண்டு மூதூரென்னும் பெயராலே கூறுவர்; கள்ளில் ஆத்திரேயனார் "ஆதியருமன் மூதூ ரன்ன" என்றார்: (குறு. 2") இவனை நற்றிணையிற் பாடியவர் நக்கீரர்: (நற். 367)
3. அழிசி
இவன் சோழர் மரபினனாகிய ஒரு சிற்றரசன்: மிகுந்த கொடையாளி: சோழ நாட்டிலுள்ள ஆர்க்காடென்னு மூரிலிருந்தவன். இவன் ஆர்க்காட்டையும் சிலவூர்களையுங் கைக்கொண்டு ஆண்டுவருநாளில் இவனுக்குப் புதல்வனொருவன் பிறந்தனன். அவன் சேந்தனெனப் பெயரிட்டு வளர்க்க வளர்ந்து "திதலை யெஃகிற் சேந்தன் றந்தை, தேங்கமழ் விரிதா ரியறே ரழிசி, .. அரியலங் கழனி யார்க்காடு" (நற். 190) பின்பு உறையூரைக் கைப்பற்றி அரசாண்டு வந்தனன்: "ஏந்துகோட் டியானைச் சேந்த னுறந்தை" - (குறு. 258) இவனை நற்றிணையிற் பாடியவர் பெயர் தெரியவில்லை.
4. அன்னி
இவன் சோழனாட்டுப் பாபவிநாசம் புகைவண்டி நிலையத்துக்கருகிலுள்ள ஒரு சிற்றூரிலிருந்த சிற்றரசன். இவன் இருந்தவூர் பிற்காலத்து இவன் பெயராலே அன்னிகுடியென்று வழங்கிவருகிறது. இவன் மாயூரத்தின் மேற்கிலுள்ள திருவழுந்தூரிலிருந்த (அகம். 196) வேளிர்மரபினனாகிய திதியனுக்குரியதும் நந்திபுரவிண்ணகரமென்னும் நாதன் கோயி்ற்கடுத்த குறுக்கையென்னு மூரிலுள்ளதும் அத் திதியனது காவன் மரமுமாகிய ஒரு புன்னை மரத்தை விரும்பி (அகம். 45) வைப்பூரிலுள்ள எவ்வி யென்பவன் அடக்கவும் அடங்காமல் (அகம். 126) அந்த புன்னைமரம் நிரம்பப் பூத்திருக்கும்பொழுது அதனை வெட்டிச் சாய்த்தனன் (அகம், 145) அதுகாரணமாகத் திதியனுக்கும் அன்னிக்கும் போர் மூண்டது. அப்போரும் புன்னையை வெட்டி விழுத்திய குறுக்கையிலேயே போர் செய்தற்குரிய ஓரிடத்தில் நடந்தது: (அகம். 45, 126) அப் போரில் திதியன் வெற்றிகொண்டு அன்னியைப் பற்றி அவன் கண்ணைப் பிடுங்கி விட்டான்: (அகம். 196) அன்னியின் புதல்வனாகிய மிஞிலி யென்பவன் கடுஞ்சினமடைந்து தனக்குப் படைத்துணை பெருகுமளவும் தான் பரிகலத் துண்ணாமலும் வெளிய உடைகளை யுடுக்காமலும் சிலகாலமிருந்தான்: (அகம். 262) பின்பு வெற்றிமிக்க குறும்பிய னென்பவனால் திதியனை மரபோடழியக் கொல்லுவித்து மிக்க மகிழ்ச்சியுடையவனாகித் திருவழுந்தூரிற் பெரிய