lxxiii


மாறோக்கத்து நப்பசலையாராலும் பாடப்பெற்றவன்; விற்போரால் வென்று நிரை கவர்பவன்; - "பல்லா நெடுநிரை வில்லி னொய்யும், தேர்வண் மலையன்" - (நற். 100)"மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்தெல்லித் தரீஇய வினநிரைப், பல்லான் கிழவரின்" -(நற். 291) இவன் அரசாளுநாளில் ஆரியர் பெரும்படையொடு வடக்கிலிருந்து தமிழ்நாடு புகுந்து திருக்கோவலூரை முற்றினார்; அதுகண்ட காரி அஞ்சாது எதிர்த்துப் போர்செய்ய அவர் ஆற்றாராய்ப் பின்வாங்கி ஓடலாயினார்; "ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப், பலருடன் கழித்த வொள்வாண் மலையன, தொருவேற் கோடி யாங்கு" (நற். 170) இவ்வாறு இவன் வெற்றி மேன்மேலெய்தக் கண்ட தகடூர் அதியமானெடுமானஞ்சி படையொடு வந்து கோவலூரை முற்றிக் காரியைத் தோற்கச்செய்து ஓட்டிவிட்டு இவனது நாட்டினைக் கைப்பற்றிக்கொண்டான். தோற்றோடிய காரி பெருஞ்சேரல் இரும்பொறையையடைந்து அவன் கருத்துப்படி கொல்லி மலையை யாண்ட வல்வில்லோரியைப் போரிலே கொன்று அவ்வோரியினது நாட்டைச் சேரலனுக்குக் கொடுத்துவிட்டு அவனை அஞ்சி மேற் படையெடுக்குமாறு செய்வித்தான்., சேரன் தகடூரை முற்றி அஞ்சியைக் கொன்றுபோக்கி அவன் கைப்பற்றியிருந்த கோவலூர் நாட்டைக் காரியிடம் கொடுத்தனன்; அவன் அதனைப் பெற்று முன்போல ஆண்டிருந்தனன். நற்றிணையில் இக் காரியைப் பாடியவர் கபிலரும் பரணரும் (100, 170, 291, 320)

9, குட்டுவன்

    இவன் சேரர் மரபினன். குட்டநாட்டை யாண்டமையிற் சேர மரபினர் குட்டுவரெனப்பட்டார். குட்டநாடு - மலை நாட்டின் ஒருபகுதி. கடைச்சங்க நிலையிட்ட முடத்திருமாறனாற் புகழ்ந்து பாடப்பெற்றமையின் இவன் இற்றைக்கு 2500 ஆண்டின் முற்பட்டவனாக வேண்டும். இவனைப் பாடியவர் முற்கூறிய முடத்திருமாறன்; (நற். 105)

10. கொல்லிப்பாவை

    இது கொல்லிமலையின் மேல்பாற் செய்துவைக்கப்பட்ட பெண்வடிவமாகிய படிமை. கொல்லிமலை தவஞ்செய்வோர்க்கும் தனித்துறைவோர்க்கும் தகுதியான இடம்; தேன், பழமுதலாய உணவுப்பொருள் மிகுதியாகக் கிடைக்குமாதலால் இனிதினிருக்கக்கூடும். இதனை யெண்ணியே தேவரும் முனிவரும் அங்கு வைகுவாராயினர். இவர்கள் தங்கியிருப்பது கண்ட இராக்கதரும் அசுரரும் அங்கு வந்து கூடுவாராயினர். இவ்வாறு இராக்கதாதியர் வந்து நெருங்கவே முனிவர்கள் தவத்துக்கு ஊறு நேர்வதாயிற்று. அப்பொழுது தேவரும் முனிவரும் தனியிருந்து ஆராய்ந்து அப் பகைவர் மனத்தையடக்க வல்லரல்ல ராதலின் அவர்கள் வருநெறியிற் கண்டு மயங்கி உயிர் விடும் வண்ணம் அழகமைந்த பெண் வடிவஞ் செய்துவைப்பதாக நிச்சயித்து விச்சுவகன்மாவுக்குக் கூற, அவனும் அம் மலையின் மேல்பால் அசுராதியர் வருநெறியிற் கல்லாற் பாவை யொன்றமைத்து உள்ளே பலவகையான சக்தியை ஊட்டி நிலை நிறுத்தினான். இப்பாவை இயங்குந்தன்மையது; இராக்கதாதியர் வாடை பட்டவுடன் நகைக்குந் திறனுடையது; கண்டவரது உள்ளத்தையும் விழியையுங் கவர்ந்து அவர்க்குப் பெருங் காமவேட்கையுறுவித்து இறுதியிற் கொல்லத்தக்க மோகினி வடிவமுடையது. இப் பாவையை நோக்கினோர்