lxxv


யெனவுங் கூறப்படுவன்; "இளம் பெருஞ்சென்னி.....செம்புறழ்புரிசைப் பாழி நூறி, வம்ப வடுகர் பைந்தலை சவட்டி" - (அகம். 375) வம்ப வடுகர் - புதியராய்த் தமிழ்நாடு புகுந்த வடுகர்.இந் நன்னன் மிக்க கொடையாளி; இரவலர்க்கு யானை முதலாய பரிசிலளிப்பவன்; "இசை நல்லீகைக் களிறுவீசு வண்மகிழ், ..... நன்னன்"- (அகம். 152) "அகவுநர்ப் புரந்த அன்பின்......நன்னன்" - (அகம். 97) இவன் ஆற்றலாற் பிண்டன் முதலானோரை வென்று மிகுந்த பொருளீட்டி அப் பொருளைப் பாழியிற் சேமித்து வேளிர் பலரைக் காக்குமாறு வைத்திருந்தனன்; (அகம். 258) முற்கூறிய பிண்டனோடும் இன்னும் பலவரசரோடும் போர்செய்து அவரைக் கொன்றவுடன் (அகம். 152) அப் பிண்டன் முதலானோருடைய உரிமை மகளிரைப் பற்றிவந்து அம் மகளிர் தலையைச் சிரைத்து அக் கூந்தலைக் கயிறாகத் திரித்து அக் கயிற்றினால் அப் பகையரசரின் யானையைப் பிணித்து வந்தவன்; (நற். 270) இவன் பிறந்தநாட் கொண்டாட்டம் பலராலும் புகழப்படுவது; (மதுரைக் காஞ்சி 618, 619 அடிகள்) இவனது தோட்டத்திலுள்ள மாமரத்தின் பசுங்காய் அருகிலோடிய ஒரு கால்வாயில் விழுந்து வருவதனை அங்கு நீராடச்சென்ற ஒரு பெண்ணெடுத்துத் தின்ற தவற்றுக்காக அவளை அவள் தந்தை பலயானைகளும் அவள் நிறை பொன்னும் கொடுப்பதாக இரந்து வேண்டியும் இரங்கானாய்க் கொல்லுவித்தனன்; (குறு. 292) இவன் கொடுங்கோலனென்றோ வேறெதனாலோ சேரநாட்டை அக் காலத்து அரசாண்டுவந்த களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் இவனைப் போர்செய்தழிப்பது கருதித்தன் சேனாதிபதி ஆஅய் எயினனைப் பெரும்படையோடு செல்லவிடுத்தனன்.

     இந்த ஆஅய் எயினன் வெளியம் என்னும் ஊரில் வேளிர் மரபிற் பிறந்தவன்; (அகம். 208) மிக்க வீரமுடையவன்; வேண்டினோர்க்கு வரையாது யானை முதலியவற்றைக் கொடுக்கும் வண்மை உடையவன். அந்நாளில் மதுரையிலிருக்கும் அகுதை யென்பவன் தான் மிக்க வீரமுடையவனாயிருந்தும் இவ் ஆஅய் எயினனுக்கு நடுங்கி யொடுங்கி யிருந்தனன்; இத்தகைய மேம்பாடுகொண்ட இவ் ஆஅய் எயினன் நன்னனது படைத்தலைவனாகிய மிஞிலி மிக்க வீரமுடையவனென்று பிறர் தடுத்துக் கூறியதையுங் கேளாமல் (அகம். 396) அவனொடு பாழி யென்னுமிடத்திற் போர் தொடங்கினான். அப்பொழுது அந் நன்னன் தனது பேய்க் கூட்டருகில் (அகம். 142) நின்று கூறிய கட்டளையை பேற்கொண்டு அவன் படைத்தலைவனாகிய மிஞிலி வந்தெதிர்நின்று போர் தொடங்கி நண்பகற்பொழுதில் வேலாலெறிந்து ஆஅய் எயினனைக் கொன்றான். விழுந்த எயினன்மேல் வெயில்படாவாறு பறவை பந்தரிட்டாற்போலச் சூழ்ந்தன; நன்னன் மனமழுங்கியிருந்தனன்; (அகம். 208) பிறகு அவ் எயினனின் உரிமை மகளிர் திரண்டெழுந்து காவிரியாற்றுக்கு வந்து தங்கள் வழக்கப்படி சரமக்கிரியை முடித்து அலங்கரித்த எயினன் போன்ற வடிவமொன்றனை அந்நீரிற் போகட்டு நீராடிப் பெயர்ந்து போயினர்; (அகம். 181) இப் பெரும்பூசல் கேட்டு மதுரையில் அடங்கிக் கிடந்த அகுதை அச்சம் நீங்கி மகிழ்வானாயினான்; (அகம். 208)

     இங்ஙனம் சேனாபதி முடிந்தானென்பது கேட்ட களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் வெகுண்டு பெரும்படையோடு வந்து பெருந்துறையென்னுமிடத்தில் நன்னனால் பாதுகாக்கப்பட்டு வந்த அவனது