lxxvi


காவன் மரமாகிய வாகையை வெட்டிச்சாய்த்தனன். (இவ் வாகைப் பறந்தலை வாகையென்னும் பெயரொடு இப்பொழுது முளது.) இதனையறிந்த நன்னன் தன் பெரும்படையோடு வந்து எதிர்நின்று பலநாள்காறும் போர் செய்ய ஈற்றில் சேரலன் படையால் நன்னன் இறந்தொழிந்தனன்; “குடாஅ, திரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற், பொலம்பூண் நன்னன் பொருகளத் தொழிய, வலம்படு கொற்றந் தந்த வாய்வாட், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேர, லிழந்தநாடு தந்தன்ன” - (அகம். 199) நன்னன் கதையை யாண்டும் எடுத்துக் காட்டினவர் பரணர்; (நற் 270, 391) இந் நன்னனுடைய பாழியும் பாரமும் பிறவும் சேனாபதி மிஞிலி யென்பவனால் முன்பு காக்கப்பட்டு வந்தன; (நற், 265)

14. தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியன்

    இவன், மதுரையிற் பாண்டியர் மரபிலே தோன்றிக் கல்வி கேள்வி வீர முதலாயவற்றாற் சிறந்து, கவிபாடுந் திறனு முடையனாய் மாங்குடி மருதனார் முதலாகிய வித்துவான்களாற் புகழ்ந்து பாடப்பெற்று, இளமையிலேயே அரசவுரிமை கைக்கொண்டு, ஆட்சிபுரிந்து வருவானாயினான். அந்நாளிற் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும (புறம். 76)இந் நெடுஞ்செழியனை இகழ்ந்து கூறிப் பாண்டிநாட்டைக் கைப்பற்றக் கருதி மதுரையை முற்றுகையிட்டார்கள். அது கண்ட நெடுஞ்செழியன் சினமிகுந்து “நகுதக்கனரே” (புறம். 72 என்ற செய்யுளால் வஞ்சினங்கூறிப் போருக்கெழுந்து உழிஞைசூடிப் போர் செய்யத் தொடங்கினான்; (புறம். 79) இவன் மிக்க இளையனாயிருந்தும் அஞ்சாமற் கடும்போர் புரிந்து (புறம். 77) அவ்வெழுவருந் தோற்றோட வென்றான்; (புறம். 76) தோற்ற எழுவரும் ஓடிச்சென்று சோழ நாட்டிற் புகும்போதும் இவன் விடாது பின்தொடர்ந்து சென்று திருத்தலையாலங்கானத்து மறித்து நின்று பெருஞ்சமர் நடத்தி வேளிர்.....[இதனை எழுதிமுடிக்குமுன் உரையாசிரியர் உடல் நீங்கினர். பாடப்பட்டோருள் கிள்ளிவளவன் முதலிய சிலரது வரலாறும் எழுதப்படவில்லை.]