viii


பி. அ. நாராயணசாமி ஐயர் வரலாறு

குடும்பமும் தோற்றமும்

    இவ் அந்தணப் பெரியார் அவதானிகள் (பன்னினைவாற்றல்) குடும்பத்தில் பிறந்தவர், தந்தையார் அப்பாசாமி ஐயர் என்னும் வேங்கட கிருட்டிண அவதானிகள். தாயார் சீதாலட்சுமி அம்மாள். ஊர் பின்னத்தூர். இது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த திருத்துறைப்பூண்டித் தாலுகாவைச் சேர்ந்தது. இவர் கி. பி. 1862 செப்டம்பர் 10 புதன்கிழமை கொல்லம் 1038 ஆவணி 27ஆம் நாள் பிறந்தவர். இவர் தந்தையார் மருத்துவ நூற் புலவராய், அமைதிக் குண மிகுந்தவராய், அறவைத்தியம் செய்வதிலும் மெய்யடியார்களைப் போற்றுவதிலும் தம் வாழ்நாளைப் போக்கிவந்தவர். குடும்பத்திற் குரிய சொத்துக்களைப் பேணி வளர்ப்பதில் சிறிதும் கவலையற்றவர். இவர் தந்தையுடன் பிறந்த பெண்கள் இருவர் மணம்முடிந்த சின்னாளிலேயே கைம்பெண்டிராய்த் தமையன் வீட்டிலே தங்கி வாழ்ந்துவந்தனர். நம் புலவருடன் பிறந்தவர்கள் ஆடவர் மூவர், பெண்கள் மூவர். ஆடவருள் மூத்தவர் நம் புலவரே. இவர்களையெல்லாம் அன்புடன் வளர்த்து வந்தவர் இவர் அத்தையாகிய சேசியம்மாள், இது நம் புலவர்பாடிய "பழையது விடுதூது" என்னும் பாடல் நூலில்,

  
"ஒத்த அன்பில் பல்கதைகள் ஓதிஉவந் தேசேசி 
  
 அத்தை இனி தூட்டும் அன்னமே" 

என்னும் அடிகளால் விளங்கும்.

இளமையும் கல்வியும்

    இவர் இளமையிலேயே சிறிது வடமொழி கற்றுக்கொண்டதோடு மறையும் ஓதிவந்தார். இவர் பதின்மூன்று அகவை வரை பின்னத்தூரில் பள்ளிக்கூடம் வைத்திருந்த கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியாரிடம் தமிழ் கற்றுவந்தார். இவர் மன்னார்குடிக்குச் சென்றிருந்த காலத்தில், ஆங்குள்ள ஆங்கிலப்பள்ளித் தமிழ்ப் பண்டிதர் நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் கம்ப இராமாயணத்திற் சில செய்யுட்களுக்குப் பொருள் விரித்துரைத்துக்கொண்டிருந்தனர். அதைக் கேட்ட நம் இளம்புலவர் கம்ப இராமாயணம் கற்க ஆவல் மிகுந்தார். சுந்தரகாண்டமே