ஓத ஞானி. (பி-ம்.) 1. ‘பூவளைந்தன்ன’; 4. ‘கானலோனே’.
(ப-ரை.) தேரோன் போகிய கானலான் - தேரில் வந்த தலைவன் மீண்டு சென்ற கடற்கரைச் சோலையில், இவண் -இவ்விடம், பூண் வனைந்தன்ன - பூணைப் பதித்தாற் போன்ற,பொலஞ் சூட்டு நேமி - பொன்னால் ஆகிய விளிம்பைஉடைய சக்கரத்தின், வாள் முகம் துமிப்ப - வாளைப்போன்ற வாய் துணித்தலினால், வள் இதழ் குறைந்த -வளவிய இதழ்கள் ஒடிக்கப்பட்ட, கூழை நெய்தலும்உடைத்து - குறையாகிய நெய்தல் பூக்களையும் உடையது.
(முடிபு) தேரோன் போகிய கானல் நெய்தலும் உடைத்து.
(கருத்து) நேற்றுத் தலைவன் ஈண்டு வந்திருந்தான்.
(வி-ரை.) தலைவன் அல்ல குறிப்பட்டுச் சென்று மறுநாள் வந்துதான் முதல்நாள் வந்து தலைவியைக் காணப் பெறாமையைத் தோழியிடம்உரைப்ப, தலைவி தான் குறியென மருண்டு சென்றும் தலைவன்வந்திலனெனக் குறைகூறும்பொழுது தோழி, “அவன் வந்திருந்தான்.அதற்கு அடையாளமாக அவன் ஊர்ந்து வந்த தேர்ச் சக்கரச் சூட்டாற்குறைக்கப்பட்ட நெய்தல் மலர்களைக் காணலாம்” என்று கூறினாள்.கூழை நெய்தல் கொடிகளெனினுமாம்.
கானலானே: ஏ அசை நிலை.
ஒப்புமைப் பகுதி 1. பொலஞ் சூட்டு நேமி: “பொலஞ்சுட ராழி பூண்ட தேரே” (தொல். புள்ளி. 61, ந. மேற்.)
3.கூழை: குறுந். 133:2, 179:7; அகநா. 275:17.
1-3. நேமியால் நெய்தல் குறைதல்: “கடுமா நெடுந்தேர் நேமிபோகிய, இருங்கழி நெய்தல் போல” (குறுந். 336:4-5); “நெய்தன்மயக்கி வந்தன்று .. கொண்கன் றேரே” (ஐங். 101:3-5); “ஆழி, நுதிமுகங்குறைத்த பொதி முகிழ் நெய்தல்” (அகநா. 160:12-3.)
கடற்கரைக் கொடிகள் நேமியால் குறைதல்: நற். 338:2-3; அகநா. 80:8-10.
(227)