மோதாசனார் (பி-ம்.) 2. ‘புன்றளை’, ‘வாங்கினள்’; 4. ‘உறப்ப’, ‘மன்னே’; 5. ‘நல்லைமன்ற பாலே’; 6. ‘லன்னவர்’; 7. ‘மனமகிழ்’, ‘மனைமகிழ்’.
(ப-ரை.) இவன் இவள் ஐம்பால் பற்றவும் - இவன்இவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவன் புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் - இவள் இவனதுபுல்லிய தலை மயிரை வளைத்து இழுப்பாளாய் ஓடவும்,காதல் செவிலியர் தவிர்ப்பவும் - அன்புடைய செவிலித்தாயார் இடைமறித்துத் தடுக்கவும், தவிராது - ஒழியாமல்,ஏதில் சிறு செரு உறுப - அயன்மையை உடைய சிறியசண்டையை முன்பு பொருந்துவார்கள்; இப்பொழுது, மலர்துணை பிணையல் அன்ன இவர் - மலரைப் பிணைத்தஇரட்டை மாலையைப் போன்ற இவர்கள், மணம் மகிழ்இயற்கை காட்டியோய் - மணம் புரிந்து மகிழும் இயல்பைஉண்டாக்கினாய்; ஆதலின், பாலே - ஊழ்வினையே, மன்றநல்லை - நீ நிச்சயமாக நன்மையை யுடையாய்.
(முடிபு) செரு உறுப; பாலே, மணமகிழியற்கை காட்டியோய்;நல்லை மன்ற.
(கருத்து) ஊழ்வினையின் வலியால் இவர்கள் தலைவனும்தலைவியும் ஆயினர்.
(வி-ரை.) தமக்கு அணிமையிலே செல்வதைக் காண்பவராதலின்இவன் என்றும் இவள் என்றும் சுட்டினார். ஐம்பால் - ஐந்து பகுப்பைஉடைய கூந்தல்; அவை குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சைஎன்பன (சீவக. 2437, ந.)
புன்றலை - சிவந்த தலை எனலுமாம் ( பட். 90, மலைபடு. 217,253, ந.) ஓரி - ஆண் தலைமயிர் ( பெரும்பாண். 172, ந.) ஐந்துவகையினராதலின் செவிலியர் எனப்பன்மையால் கூறினர் ( சீவக. 363,ந.) ஏதில் சிறுசெரு - காரணம் இல்லாத சிறிய கலாமெனலுமாம், ஏது- காரணம்; “ஏதின்றி” (கலி. 122:3.) மன்ற அம்மவென்பது மன்றம்மவெனவந்தது; விகாரம்; அம்ம: வியப்பிடைச் சொல். துணைப்பிணையல்,மலர்ப்பிணையல் எனக் கூட்டுக.
தம்முட் கலாம் விளைத்தாரை ஒன்றுபடுத்திப் பாலை நிலத்தில்உடன்போகச் செய்வித்தமையின் ‘நல்லை மன்றம்ம’ என்று வியந்தனர்.இளமையில் காலம் விளைத்ததை அறிந்தவராதலின் இது கூறினார்.
மேற்கோளாட்சி மு. தலைவியும் தலைவனும் ஓர் ஊரினர் ( தொல். களவு. 2, ந.; இ.வி. 487).
ஒப்புமைப் பகுதி 1. ஐம்பால் பற்றல்: நற். 100:4.
5. ஊழினை வாழ்த்துதல்: “வாழிய பாலே” (ஐங். 110:5.)
மன்றம்ம: கலி. 142:5; அகநா. 367:13.
துணைமலர்ப் பிணையல்: “துணைத்த கோதை” (குறுந். 326:1);“துணையார் கோதை” (சிறுபாண். 69); “துணையறை மாலையின்” (குறிஞ்சிப். 177); “துணைமலர்க் கோதையார்” (கலி. 70:9): “துணையமைபிணையல்” (அகநா. 5:23.)
தலைவனுக்கும் தலைவிக்கும் துணை மாலைகள் உவமை:“துணையெத்த கோதையும் போலெழிற் பேதையுந் தோன்றலுமுன்,இணையொத்த கொங்கையொ டேயொத்த காதலொ டேகினரே”(திருவேகம்பமுடையார் திருவந்தாதி,73.)
(229)