அறிவுடை நம்பி (பி-ம்.) 3. ‘பெறுதகை’; 4. ‘றுடையன்’; 5. ‘நீரததவச்’; 6. ‘ளின்ன’.
(ப-ரை.) தோழி -, அம்ம - ஒன்று கூறுவன்,கேட்பாயாக: கொண்கன் - தலைவன், வய சுறா வழங்குநீர் அத்தம் - வலியை உடைய சுறா மீன் வழங்குகின்றநீரை உடைய வழியில், சில் நாள் - சில நாட்களாக, அன்ன -முன்னர் வந்து கொண்டிருந்த அத்தகைய, வரவு அறியான் -வருதலை அறியானாயினான்; தான் அது துணிகுவன்அல்லன் - அங்ஙனம் வாராது இருத்தலைத் தானாகவேதுணிந்து ஒழுகும் இயல்புடையன் அல்லன்; யான்--, என்பேதைமையால் - என் அறிவின்மையால், பெரு தகைகெழுமி - பெரிய உரிமையைப் பொருந்தி, நோதகச் செய்ததுஒன்று - அவன் வருந்தி இங்கே வாராத வண்ணம் செய்தசெயல் ஒன்றை, உடையேன்கொல் - உடையேனோ?
(முடிபு) தோழி-, கொண்கன் வரவறியான்; தான் துணிகுவன் அல்லன்;யான் கெழுமிச் செய்தது உடையேன்கொல்.
(கருத்து) நின்னைக் காணப் பலகால் வந்த தலைவன் யான்சேட்படுத்தியமையின் வாராதொழிந்தான்கொல்?
(வி-ரை.) வாழி: அசை நிலை. கொண்கன்- நெய்தல் நிலத் தலைவன்.அது என்னும் சுட்டு, செய்யுளாதலின் முன் வந்தது; வாராமையைச் சுட்டியது. தகை - தகுதி; இங்கே உரிமை.
| “பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க |
| நோதக்க நட்டார் செயின்” (குறள், 805) |
என்பவாகலின் நான் நட்புரிமையால் இங்ஙனம் செய்தேன் என்றாள்.நோதக - நோவ. தலைவன் நோவச் செய்தலாவது சேட்படுத்தல். ஓ:அசை நிலை. அன்ன: பண்டறி சுட்டு. வரவறியான் - வந்திலன் என்றபடி.
ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.
5.வயச்சுறா: குறுந். 269:3.
சுறா வழங்குநீர்: “எறிசுறாக் கலித்த விலங்குநீர்ப் பரப்பு”(குறுந். 318:1); “சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி யல்கலும், இரவுக்குறிக்கொண்கன் வந்தனன்” (சிற்றட்டகம்.)
(230)