ஊண்பித்தை. (பி-ம்.) 3. ‘வரற்புகா’, ‘வருந்த’; 4. ‘பொளித்துண்’.
(ப-ரை.) தோழி -, மரல் புகா அருந்திய - மலராகியஉணவை உண்ட, மா எருத்து இரலை - பெரிய பிடரைஉடைய ஆண்மான், உரல் கால் யானை - உரலைப்போன்ற காலை உடைய யானை, ஒடித்து உண்டு எஞ்சிய -முறித்து உண்டு குறையச் செய்த, யாஅ வரிநிழல் - யாமரத்தின்புள்ளிகளை உடைய நிழலில், துஞ்சும் - தூங்குகின்ற, மாஇரு சோலை மலை இறந்தோர் - மிகப் பெரிய சோலைகளைஉடைய மலைகளைக் கடந்து நம்மைப் பிரிந்து சென்றதலைவர், உள்ளார் கொல் - நம்மை நினைத்தாரலரோ?உள்ளியும் - அன்றி நினைத்தும், வாய்ப்பு உணர்வுஇன்மையின் - வினை முற்றி மீள்வதற்கு வாய்த்த செவ்வியைஉணராமையினால், வாரார் கொல் - வாராராயினரோ?
(முடிபு) தோழி, மலையில் இறந்தோர் உள்ளார் கொல்? உள்ளியும்வாய்ப்பு உணர்வின்மையின் வாரார்கொல்?
(கருத்து) தலைவர் வினை முற்றாமையின் வந்திலர்; விரைவில்வருவர்.
(வி-ரை.) தலைவி, “அவர் வாராராயினர்; நம்மை நினைத்திலர்”என்று கவன்றனளாதலின், அவள் கருத்தையும் ஐயத்தின் பாற்படுத்தித்தன் கருத்தையும் ஐயத்தின்பாற் படுத்தினாள்; படுப்பினும் வாய்ப்புஉணர்வின்மையின் வாராராயினர் என்பதே தோழி கருத்தாகக் கொள்க.
கொல்: ஐயம். ஓ: அசை நிலை.
வாய்ப்பு- வாய்த்தல்; என்றது தாம் நினைந்து வந்த வினை முடிந்துமீள்வதற்குரிய செவ்வி வாய்த்தல். புகா - உணவு, உண்டு - உண்ணஎனினுமாம்; எச்சத்திரிபு.
தனக்கு வேண்டிய உணவைப் போதிய அளவு உண்ட இரலையாமரத்தின் அடியின்கண் வந்து துஞ்சுதலைப் பார்ப்பாராதலின் தமக்குவேண்டிய வினையை நன்கு முடித்து ஈண்டு வந்து நின்னோடு இன்புறுவர் என்பது குறிப்பு.
மேற்கோளாட்சி 4. செய்தெனெச்சம் செயவெனெச்சப் பொருட்டாய் நின்றது (
தொல். வினை.
34, சே.); செய்தெனெச்சம் வினைமுதல் வினை கொள்ளாது பிறிதின் வினைகொண்டு ஈறு திரிந்தது (
தொல். எச்ச.
61,சே,
55, தெய்வச்.); செய்தெனெச்சம் தனக்குரிய வினை முதலானன்றிப்பிற வினை முதலோடு காரண காரியமின்றி வந்து முடிந்தது(
தொல். வினை.
34,ந.); செய்தனெச்சம் பிறவினை கொண்டு முடிந்தது(
சீவக. 15, ந.); முதனிலை திரியாத பிறவினை (
இ. கொ. 71.)
4-5. செயவெனெச்சம் செய்தெனெச்சமாகத் திரிந்தது ( நன். 345, மயிலை, 346, சங்.); முதற்பொருளின் வினை தமக்குரிய வினை முதல்வினையானன்றிப் பிறவினை முதல் வினையோடு முடிந்தது (இ.வி. 248);எஞ்சிய என்பதற்கு எஞ்சுவித்தவெனப் பொருள் கொள்ள வேண்டும்( தொல். பாயிரவிருத்தி. ப. 10.)
ஒப்புமைப் பகுதி 1. உள்ளார்கொல்லோ தோழி: குறுந். 16:1, ஒப்பு.
1-2. ‘‘உள்ளார் கொல்லோ காதல ருள்ளியும், சிறந்த செய்தியின்மறந்தனர் கொல்லோ” (அகநா. 235:2-3.)
3. மரல்:குறுந். 100:2.
மான் மரலை உண்ணுதல்:கலி. 6:1; “மடமா னசாவினந் திரங்குமரல் சுவைக்கும்”, “வரிமரற் கறிக்கு மடப்பிணைத், திரிமருப் பிரலையகாடிறந்தோரே” (அகநா. 49:12, 133:17-18.)
4.உரற்கால் யானை: “கறையடிக், குன்றுறழ் யானை” (பெரும்பாண். 351-2); “உரல்புரை பாவடி ... ஒருத்தல்” (கலி. 21:1-2); “உரற்காற் குஞ்சரம்” (தஞ்சை. 413.)
4-5.யானை யாவை உண்ணல்: குறுந். 37:3-4, ஒப்பு; மலைபடு. 429.
(232)