அள்ளூர் நன்முல்லை. (பி-ம்.) 2. ‘நெஞ்சுணப்'; 4. ‘விருவர் தமிடையே'; 5. ‘முழங்கு'.
(ப-ரை.) பாக, அஞ்சுவது அறியாது - அஞ்சுதலைஅறியாமல், அமர் துணை தழீஇய - நாம் விரும்பும்தலைவியைத் தழுவும் பொருட்டு, நெஞ்சு - என் நெஞ்சு,நம் பிரிந்தன்று - நம்மைப் பிரிந்து சென்றது; ஆயினும் -ஆனாலும், எஞ்சிய - குறைபாடாக உள்ள, கை பிணிநெகிழின் - கையாற்றழுவுதல் நெகிழுமாயின், அஃது எவன் -நெஞ்சு சென்று தழுவிய அதனால் பயன் யாது? இருவாம்இடை - யானும் தலைவியுமாகிய இருவருக்கும் இடையில்உள்ள இடங்கள், நன்றும் சேய - மிக்க சேய்மையைஉடையன; முயக்கிடை மலைவு - தலைவியோடு சேர்தற்குஇடையிலே உள்ள தடையாகிய, கோள் புலி - கொலைசெய்யும் புலியானது, மா கடல் திரையின் முழங்கி - கரியகடலின் அலையைப் போல ஆரவாரம் செய்து, வலன ஏர்பு - வலமாக எழுந்து, வழங்கும் சோலை - உலவுகின்றசோலை, எனைத்து என்று எண்ணுகு - எத்தனை என்று எண்ணுவேன்?
(முடிபு) நெஞ்சு பிரிந்தன்று; ஆயினும் நெகிழின் எவன்? இடைசேய;மலைவாகிய சோலை எனைத்தென்று எண்ணுகு?
(கருத்து) தலைவி உள்ள இடம் நெடுந்தூரத்தில் உள்ளது.
(வி-ரை.) அஞ்சுவது அறியாது - நான் அஞ்சுவதைத் தான் அறியாது எனலும் ஆம். தலைவியைக் காண்பதற்குரிய விருப்பையும் விரைவையும் நெஞ்சத்தின் மேல் ஏற்றிக் கூறினான். தனக்கு முன் நெஞ்சு பிரிந்து தலைவியை அடைந்ததென்னும் இத்தகைய கருத்து,
| ‘கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி |
| ..... ........... .......... ........... |
| தொடிக்கை தைவரத் தொய்ந்தன்று கொல்லோ |
| நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் |
| அந்தீங் கிளவிக் குறுமகள் |
| மென்றோள் பெறனசைஇச் சென்றவென் னெஞ்சே’ (அகநா.9:20-26) |
என்பதிலும் காணப்படும்.
“நெஞ்சு என்னினும் முந்தச் சென்றதாயினும் கை நெகிழாது தழுவாமையால் அது சென்றும் பயனில்லை. யான் செல்லின் நெகிழாதுதழுவுவேன்” எனக் கூறினான். உள்ளப் புணர்ச்சியினும் மெய்யுறு புணர்ச்சியே வேண்டுவது என்பது அவன் கருத்து. நன்று மிகுதிப் பொருளது (குறுந்.29:4.) இருவாம் - இருவராகிய யாம் (கலி.41:3, 43:4.)
சோலையின்கண் மலைவு எனைத்தெனக் கூட்டலும் பொருந்தும்.
இதனால் தலைவன் பாகனுக்குத் தனது காம மிகுதியையும் நெஞ்சின் விதுப்பையும் புலப்படுத்தி விரைவில் தேரை விடுதல் வேண்டும் என்று குறிப்பித்தான்.
அம்மவும், ஓகாரங்களும், ஏகாரங்களும் அசை நிலைகள்.
ஒப்புமைப் பகுதி 1. அமர் துணை தழீஇ; குறுந்.215;5
2. (பி-ம்.) நெஞ்சுண: நற். 204:5, 214:6; அகநா. 157:10.
3. கைபிணி நெகிழ்தலாற் பயனின்மை: ‘‘முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது, பைந்தொடிப் பேதை நுதல்’’ (குறள்.1238.)
5-6. புலியின் முழக்கத்திற்குக் கடலின் ஒலி: ‘‘வயமாப் போல்,ஆலித்துப் பாயு மலைகடற் றண்சேர்ப்ப’’ (பழ.40.)
7. எனைத்து: குறள், 515.
(237)