தூங்கலோரி. (பி-ம்.) 1. செறீஇயும்; 3. நின்றாய் நீயே; 4. ஓரா வல்சிச்.
(ப-ரை.) உடுத்தும் - உடையாக உடுத்துக் கொண்டும்,தொடுத்தும் - மாலையாகத் தொடுத்தணிந்தும், பூண்டும் -குழை முதலிய அணிகலன்களாக அணிந்தும், செரீஇயும் -கூந்தலின் கண்ணே செருகியும், தழை அணி பொலிந்தஆயமொடு - தழையலங்காரத்தினாற் பொலிவு பெற்றபரத்தையர் கூட்டத்தோடு, துவன்றி - நெருங்கி, நீ விழவொடுவருதி - நீ நீர்விழாவிற்குரிய அடையாளங்களோடு வாராநின்றாய்; இ ஊர் - இந்த ஊரிலுள்ளார், இஃது ஓர் ஆன்வல்சி சீர்இல் வாழ்க்கை - ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக்கொண்டு உண்ணும் உணவையுடைய செல்வச் சிறப்பில்லாதஇல்வாழ்க்கை, பெரு நலம் குறு மகள் வந்தென - மிக்கஅழகையுடைய இளைய தலைவி இவனுக்கு வாழ்க்கைப்பட்டுப் புக்கனளாக, இனி - இப்பொழுது, விழவு ஆயிற்று -விழாவை யுடையதாயிற்று, என்னும் - என்று சொல்வர்.
(முடிபு) துவன்றி நீ வருதி; இவ்வூர், ‘ஒரான் வல்சி வாழ்க்கை,குறுமகள் வந்தென விழவாயிற்று’ என்னும்.
(கருத்து) நின் செல்வத்துக்குக் காரணமாகிய தலைவியைநீத்துறைந்தமையால் ஊரினர் பழி கூறினர்.
(வி-ரை.) தழையை உடுத்துதலாவது மலரோடு இடையிட்டுத்தொடுத்துத் தழையென்னும் ஆடையாக உடுத்துவது; தொடுப்பதாவது,மலரோடு கட்டிப் படலை மாலையாக அணிவது; பூண்பதாவதுகாதிற்குழையாகப் பூணுதல்; செருகுதல் - தலையிற் செருகுதல்.
“நீ நீர்விழாவை யயர்ந்து வருகின்றாய். தலைவி வருதற்கு முன்இவ்விழாவுக் குரிய வளம் நின்பால் இல்லை. அவள் வந்த பின்னரே நீசெல்வம் பெற்றாயென்று ஊரினர் கூறினர். இப்படி யிருப்பவும் நீ அவளைப் புறக்கணித்தாய் என்று தோழி தலைவனை இடித்துரைத்து வாயில் மறுத்தாள்.
ஓராவையுடைய வீடு வறியதென்ற கருத்து,
| “சிறப்புஞ் சீரு மின்றிச் சீறூர் |
| நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை |
| ஓரா யாத்த வொருதூண் முன்றில் |
| ஏதில் வறுமனை” (அகநா. 369: 22-5) |
என்பதிலும் அமைந்துள்ளது.
இஃதோ வாழ்க்கையென்றது இல்வாழ்க்கை யென்னும் பொருட்டாய்நின்றது; ‘இஃதோ செல்வன் - இந்தச் செல்வன்’ (அகநா. 26:19-20,உரை.) வல்சி வாழ்க்கை, சீரில் வாழ்க்கையென்க.
தலைவியின் சிறப்பை இங்கே கூறியது, “ஏர் பிடித்தவன் என்னசெய்வான்; பானை பிடித்தவள் பாக்கியம்” என்ற பழமொழியைநினைவுறுத்துகின்றது.
மேற்கோளாட்சி மு. கழறித் தலைவனை எல்லையின் கண்ணே நிறுத்துதல் அறிவர்க் குரியது; அங்ஙனம் கழறியது இது (தொல். கற்பு. 14, இளம்.); நல்குரவு சிறப்பித்தல் காரணமாக வந்தது; ‘இதனுள்ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கையெனத் தலைமகன் செல்வக்குறைபாடு கூறி, பெருநலக் குறுமகள் வந்தென விழவாயிற் றென்னுமிவ் வூரென்றமையான் நல்குரவு பற்றித் தலைமகளைச் சிறப்பிக்க வந்தது’ (தொல். பொருள். 49, இளம்.) உணர்ப்பு வயின் வாராது ஊடிய தலைவி மாட்டு ஊடின தலைவனை அறிவர் கழறியது (தொல். கற்பு. 14, ந.); தோழியும் அறிவரும் பரத்தையிற் பிரிவால் தலைவர்க்கும் தலைவியர்க்கும் தோன்றிய வருத்தமிகுதியைத் தீர்க்கக்கருதி, அவரது இல்வாழ்க்கை நிகழ்ச்சிக் கண்ணே தமக்கு வருத்தந்தோன்றிற்றாகக் கூறியது. ‘இதனுள் முன்னர் நிகழ்த்திய வாழ்க்கை இவள்வந்தாளாகப் புறத்து விளையாடும் விழவுளதாயிற்றென்று இவ்வூர் கூறாநிற்கும் செல்வம், இவளை நெகிழ்ந்தாற் பழைய தன்மையாமென்று அறிவர் இரங்கிக் கூறியவாறு காண்க’ (தொல். பொருள். 32, ந.)
ஒப்புமைப் பகுதி 1-2. தழையணியாயம்: குறுந். 125:3, ஒப்பு.
5. குறுமகள்: குறுந். 89:7, ஒப்பு.
(295)