சிறைக்குடி யாந்தையார.் (பி-ம்.) 4. ‘நுண்பகுறுத்தி’; 8. ‘சூழலென்’, ‘சூழிலன்’, ‘சூழலன்யானின்னுடை’.
(ப-ரை.) குவளை நாறும் - குவளை மலரின் மணத்தைவீசுகின்ற, குவை இரு கூந்தல் - தொகுதியாகிய கரியகூந்தலையும், ஆம்பல் நாறும் - ஆம்பல் மலரின் மணத்தைவீசும், தேம் பொதி துவர் வாய் - தேன் பொதிந்த சிவந்தவாயையும், குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன -ஆழமாகிய நீரில் வளர்ந்த தாமரைப் பூந்தாதைப் போன்ற,நுண்பல் தித்தி - நுண்ணிய பல தேமற் புள்ளியையுமுடைய,மாஅயோயே - மாமை நிறமுடையாய், நீ--, அஞ்சல்என்ற என் சொல் - யான் பிரிவேனென்று கருதி அஞ்சாதேகொளென்ற எனது சொல்லைக் கேட்டு, அஞ்சலை-அஞ்சாதே கொள்; யான்--, நின்னுடை நட்பு - நினதுநட்பினை, குறு கால் அன்னம் - குறிய காலையுடையஅன்னப் பறவைகள், குவவு மணல் சேக்கும் - குவிதலையுடைய மணலின் கண்ணே தங்கியிருக்கும், கடல் சூழ்மண்டிலம் பெறினும் - கடல் வளைந்த நில வட்டத்தைப்பெறினும், விடல் சூழலன் - விடுதலை நினையேன்.
(முடிபு) மாஅயோயே, நீ அஞ்சலை; யான் நின்னுடை நட்பு விடல்சூழலன்.
(கருத்து) நின்னைப் பிரியேன்.
(வி-ரை.) கூந்தலும், வாயும் இன்பமளித்தன வாதலின் அவற்றைமுற்கூறினான். தேமென்றது வாயூறலை நினைந்து. தலைமகள் உறுப்புநலன் கூறவந்த தலைவன் நீர்ப்பூக்கள் மூன்றை உவமையாகக் கூறினான்.மாஅயோய் - மாமையை உடையோய்.
மண்டிலமென்பது வட்டம்; கடல்சூழ் மண்டிலமென்றமையின்நிலவட்டமாயிற்று. அன்னம் மணலிற் சேக்கு மென்றது கடலுக்கு அடை.ஏகாரங்கள், ஆல்: அசை நிலைகள்.
மேற்கோளாட்சி 2. மூக்காலறியப்பட்ட பொதுத்தன்மை வந்தது (தொல். உவம. 3, இளம்.) “ஆம்பலென்றது முதலாகு பெயர் (நன். 289,மயிலை. 290, சங்கர.; இ.வி. 192.) மு. தலைவன் நயப்பும் வன்புறையுங் கூறியது (தொல். களவு. 10, ந.); தலைவன் பிரிவுணர்த்தல் (களவியற். 23.)
ஒப்புமைப் பகுதி 1. குவளை நாறும் கூந்தல்: குறுந். 270:6-8, ஒப்பு.
குவையிருங் கூந்தல்: குறுந். 52:3.
2. ஆம்பல் நாறும் வாய்: “ஆம்ப னாறுந் தேம்பொதி நறுவிரைத்,தாமரைச் செவ்வாய்” (சிலப். 4:73-4); “ஆம்பனா றமுதச் செவ்வாய்”,“ஆம்ப னாறு மரக்கார் பவளவா யாரமுதன்னார்” (சீவக. 561, 1656);நாலடி. 396.
3-4. தேமலுக்குப் பூந்தாது: “அம்பூந் தாதுக் கன்ன, நுண்பஃறித்திமாஅ யோளே” (நற். 157:9-10.)
7-8. குறுந். 267:1-6, ஒப்பு.
(300)