படுமரத்து மோசிகீரன் (பி-ம். படுமாத்து மோசிகீரன்.) (பி-ம்.) 3. ‘சென்றைக்கசென்றி’; 4. ‘வொழுங்கித்’, ‘வொழுகத்’,‘வொடுங்கித்’; 7. ‘யாதுமில்லையான்’.
(ப-ரை.) நீ உடம்படுதலின் - நீ உடன்போக இயைந்த மையால், யான்தர - நான் கூற, குன்றம் நாடன் - தலைவன்,குறி நின்றனன் - குறியிடத்தே வந்து நின்றான; நீயோ--,இன்றை அளவை சென்றைக்க என்றி - இன்றையாகியபோதுகழிக என்று கூறினாய;, கையும் காலும் ஓய்வன அழுங்க - கையும் காலும் ஓய்வனவாகி வருந்த, தீ உறு தளிரின்நடுங்கி - நெருப்பில் விழுந்த தளிரைப் போல நடுங்கி, யான்செயற்கு உரியது யாவதும் இலை - நான் செய்யத்தக்கதுஒன்றும் இல்லை.
(முடிபு) நாடன் நின்றனன்; சென்றைக்கென்றி; அழுங்க நடுங்கிச் செயற்குரியது இலை.
(கருத்து) நீ தலைவனுடன் இப்பொழுதே செல்லுதல் நலம்.
(வி-ரை.) தர - அழைப்பவெனலுமாம். குறி - குறித்த இடம். சென்றைக்க வென்பது வியங்கோட்பொருளில் வந்தது;
“இன்பத்தின் பக்கமிருந்தைக்க” (நாலடி. 79)“ஆய மடமகளிரெல்லீருங் கேட்டைக்க”“எழுதெழின் மலருண்க ணிருந்தைக்க”(சிலப்.18:49, 19:67) எனப் பிற சொற்களும் இங்ஙனம் வருதல் காண்க.
தலைவி நாணமிகுதியினால்,“இன்று போக, நாளைச்செல்வேம்” என்றாள்.
மேற்கோளாட்சி மு. வருத்தமிகுதியால் தலைவனை வழிபடுதலை மறுத்துக் கூறுமிடத்துத் தலைவிக்குக் கூற்று நிகழும்; ‘இத்தோழி கூற்றே சென்றைக்க வென்றதனால் தலைவி மறுத்தமை பெற்றாம்’ (தொல். களவு. 29, ந.)
(கு-பு.) இக்கருத்து சிறந்ததாகத் தோன்றுகிறது.
ஒப்புமைப் பகுதி 5. தளிரைப் போல நடுங்குதல்: “கொல்புனற் றளிரினடுங்குவனள்” (பதிற். 52:21).
(383)