|
|
பெய்யாது வைகிய கோதை போல |
|
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப; |
|
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் |
|
வாரார் என்னும் புலவி உட்கொளல் |
5 |
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; |
|
புணரி பொருத பூ மணல் அடைகரை, |
|
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி, |
|
வலவன் வள்பு ஆய்ந்து ஊர, |
|
நிலவு விரிந்தன்றால் கானலானே. |
உரை |
|
காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- உலோச்சனார்
|
|
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப் |
|
பாசம் தின்ற தேய் கால் மத்தம் |
|
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும் |
|
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் |
5 |
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் |
|
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள், |
|
''இவை காண்தோறும் நோவர்மாதோ; |
|
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!'' என |
|
நும்மொடு வரவு தான் அயரவும், |
10 |
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. |
உரை |
|
தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.- கயமனார்
|
|
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய |
|
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!- |
|
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த |
|
பகழி அன்ன சேயரி மழைக் கண், |
5 |
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் |
|
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் |
|
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி |
|
மயில் அறிபு அறியாமன்னோ; |
|
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே. |
உரை |
|
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்
|
|
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய, |
|
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்; |
|
நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன் |
|
அகப்பா அழிய நூறி, செம்பியன் |
5 |
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது |
|
அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து |
|
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல், |
|
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென, |
|
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் |
10 |
நெடு வரை விடரகத்து இயம்பும் |
|
கடு மான் புல்லிய காடு இறந்தோரே. |
உரை |
|
இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.- மாமூலனார்
|
|
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், |
|
நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள |
|
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப! |
|
பூவின் அன்ன நலம் புதிது உண்டு, |
5 |
நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே |
|
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி, |
|
மாசு இல் கற்பின் மடவோள் குழவி |
|
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு, |
|
சேணும் எம்மொடு வந்த |
10 |
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே! |
உரை |
|
வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.-அறிவுடைநம்பி
|
|
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற் |
|
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச் |
|
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு |
|
உரியை-வாழி, என் நெஞ்சே!-பொருளே, |
5 |
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் |
|
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே, |
|
விழுநீர் வியலகம் தூணிஆக |
|
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும், |
|
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண் |
10 |
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்; |
|
எனைய ஆகுக! வாழிய பொருளே! |
உரை |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது.-சிறைக்குடி ஆந்தையார்
|
|
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து, |
|
மால் கடல் திரையின் இழிதரும் அருவி |
|
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி, |
|
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு |
5 |
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, |
|
''எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு'' என, |
|
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து, |
|
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து, |
|
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல், |
10 |
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி |
|
தீம் தொடை நரம்பின் இமிரும் |
|
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே. |
உரை |
|
முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்
|
|
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல |
|
வருவர் வாழி-தோழி!-மூவன் |
|
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின், |
|
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல் |
5 |
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, |
|
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் |
|
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப, |
|
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் |
|
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன, |
10 |
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. |
உரை |
|
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பொய்கையார்
|
|
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் |
|
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை, |
|
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு, |
|
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி, |
5 |
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
|
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க, |
|
செலீஇய சேறிஆயின், இவளே |
|
வருவை ஆகிய சில் நாள் |
|
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே! |
உரை |
|
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்
|
|
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி, |
|
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த் |
|
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் |
|
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர, |
5 |
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில், |
|
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி, |
|
சென்றனள்-வாழிய, மடந்தை!-நுண் பல் |
|
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்; |
|
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை, |
10 |
பழம் பிணி வைகிய தோள் இணைக் |
|
குழைந்த கோதை, கொடி முயங்கலளே. |
உரை |
|
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், ''யாரையும் அறியேன்'' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்
|
|