|
|
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த |
|
வெண் புறக் களரி விடு நீறு ஆடி, |
|
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப் |
|
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் |
5 |
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ- |
|
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு, |
|
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட |
|
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி, |
|
சிறு நுண் பல் வியர் பொறித்த |
10 |
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. |
உரை |
|
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது.-இளந்தேவனார்
|
|
மறத்தற்கு அரிதால்-பாக! பல் நாள் |
|
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய |
|
பழ மழை பொழிந்த புது நீர் அவல |
|
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை |
5 |
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், |
|
''ஏகுமின்'' என்ற இளையர் வல்லே |
|
இல் புக்கு அறியுநராக, மெல்லென |
|
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ, |
|
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய |
10 |
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ |
|
அவிழ் பூ முடியினள் கவைஇய |
|
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே. |
உரை |
|
வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-கீரத்தனார்
|
|
துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின் |
|
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன், |
|
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி |
|
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு |
5 |
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் |
|
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே |
|
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே, |
|
அஞ்சல் என்ற இறை கைவிட்டென, |
|
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின், |
10 |
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் |
|
ஓர் எயின் மன்னன் போல, |
|
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே. |
உரை |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது.-எயினந்தையார்
|
|
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி, |
|
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண் |
|
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி, |
|
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய |
5 |
நினக்கோ அறியுநள்-நெஞ்சே! புனத்த |
|
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக் |
|
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல, |
|
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில், |
|
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய |
10 |
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, |
|
செல் மழை இயக்கம் காணும் |
|
நல் மலை நாடன் காதல் மகளே |
உரை |
|
இற்செறிப்பின்பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது.-பெருங்கௌசிகனார்
|
|
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி, |
|
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு |
|
மீன் எறி பரதவர் மகளே; நீயே, |
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் |
5 |
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே: |
|
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி, |
|
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? |
|
புலவு நாறுதும்; செல நின்றீமோ! |
|
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை |
10 |
நும்மொடு புரைவதோ அன்றே; |
|
எம்மனோரில் செம்மலும் உடைத்தே! |
உரை |
|
குறை வேண்டிய தலைவனைத்தோழி சேட்படுத்தது.
|
|
வைகல்தோறும் இன்பமும் இளமையும் |
|
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து; |
|
காணீர் என்றலோ அரிதே; அது நனி |
|
பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி |
5 |
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் |
|
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி, |
|
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர, |
|
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து, |
|
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து, |
10 |
நன் வாய் அல்லா வாழ்க்கை |
|
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே. |
உரை |
|
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.
|
|
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி |
|
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது, |
|
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப் |
|
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென |
5 |
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் |
|
கானக நாடற்கு, ''இது என'' யான் அது |
|
கூறின் எவனோ-தோழி! வேறு உணர்ந்து, |
|
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி, |
|
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து, |
10 |
அன்னை அயரும் முருகு நின் |
|
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே? |
உரை |
|
சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்வெள்ளியார்
|
|
அன்றை அனைய ஆகி, இன்றும், எம் |
|
கண் உளபோலச் சுழலும்மாதோ- |
|
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ |
|
வைகுறு மீனின் நினையத் தோன்றி, |
5 |
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை, |
|
கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர் |
|
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது |
|
அமரிடை உறுதர, நீக்கி, நீர் |
|
எமரிடை உறுதர ஒளித்த காடே. |
உரை |
|
பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் |
|
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே; |
|
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப் |
|
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே; |
5 |
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, |
|
எமரும் அல்கினர்; ''ஏமார்ந்தனம்'' எனச் |
|
சென்று நாம் அறியின், எவனோ-தோழி! |
|
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ |
|
முன்றில் தாழையொடு கமழும் |
10 |
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? |
உரை |
|
தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.-நெய்தல் தத்தனார்
|
|
அறியாமையின், அன்னை! அஞ்சி, |
|
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன் |
|
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல, |
|
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை |
5 |
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின், |
|
''கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று'' என, |
|
''யாணது பசலை'' என்றனன்; அதன் எதிர், |
|
''நாண் இலை, எலுவ!'' என்று வந்திசினே- |
|
செறுநரும் விழையும் செம்மலோன் என, |
10 |
நறு நுதல் அரிவை! போற்றேன், |
|
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே. |
உரை |
|
தோழி பாணற்கு வாயில்மறுத்தது.-மருதம் பாடிய இளங்கடுங்கோ
|
|