|
|
அத்த இருப்பைப் பூவின் அன்ன |
|
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர், |
|
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர், |
|
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் |
5 |
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, |
|
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, |
|
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, |
|
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் |
|
பெருங் கழிப் பாக்கம் கல்லென |
10 |
வருமே-தோழி!-கொண்கன் தேரே. |
உரை |
|
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
|
|
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல் |
|
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் |
|
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு, |
|
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் |
5 |
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, |
|
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித் |
|
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய், |
|
மலை இமைப்பது போல் மின்னி, |
|
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே? |
உரை |
|
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்
|
|
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப் |
|
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய் |
|
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் |
|
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்- |
5 |
''அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே |
|
சேறும், மடந்தை!'' என்றலின், தான் தன் |
|
நெய்தல் உண்கண் பைதல் கூர, |
|
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து, |
|
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் |
10 |
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் |
|
ஆம்பல்அம் குழலின் ஏங்கி, |
|
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே! |
உரை |
|
இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.-இளங்கீரனார்
|
|
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும், |
|
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும், |
|
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம் |
|
வைகிக் கேட்டுப் பையாந்திசினே; |
5 |
அளிதோ தானே-தோழி!-அல்கல் |
|
வந்தோன்மன்ற குன்ற நாடன்; |
|
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை |
|
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்; |
|
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு |
10 |
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி, |
|
மையல் மடப் பிடி இனைய, |
|
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே. |
உரை |
|
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது.- தொல்கபிலர்
|
|
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க |
|
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர், |
|
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; ''இன் நீர்த் |
|
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்'' என, |
5 |
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
|
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ, |
|
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர் |
|
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர் |
|
அன்பினர்-வாழி, தோழி!-நன் புகழ் |
10 |
உலப்பு இன்று பெறினும் தவிரலர்; |
|
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே? |
உரை |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.
|
|
''தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் |
|
தாம் அறிந்து உணர்க'' என்பமாதோ; |
|
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று, |
|
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை, |
5 |
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் |
|
மலை கெழு நாடன் கேண்மை, பலவின் |
|
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் |
|
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச் |
|
சேணும் சென்று உக்கன்றே அறியாது |
10 |
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த |
|
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் |
|
இன்னும் ஓவார், என் திறத்து அலரே! |
உரை |
|
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.-கந்தரத்தனார்
|
|
பெருங் கடல் முழங்க, கானல் மலர, |
|
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, |
|
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன் |
|
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர, |
5 |
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் |
|
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க, |
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை |
|
அன்னர் உன்னார் கழியின், பல் நாள் |
|
வாழலென்-வாழி, தோழி!-என்கண் |
10 |
பிணி பிறிதாகக் கூறுவர்; |
|
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே. |
உரை |
|
வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம்.-குன்றியனார்
|
|
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் |
|
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில், |
|
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் |
|
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும், |
5 |
''அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்'' என, |
|
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை |
|
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய |
|
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி |
|
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி, |
10 |
புது மலர் தெருவுதொறு நுவலும் |
|
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே! |
உரை |
|
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
தினை உண் கேழல் இரிய, புனவன் |
|
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர், |
|
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் |
|
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை |
5 |
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் |
|
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை |
|
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் |
|
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு |
|
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் |
10 |
முயங்கல் பெறுகுவன் அல்லன்; |
|
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே. |
உரை |
|
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்
|
|
தட மருப்பு எருமை மட நடைக் குழவி |
|
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல், |
|
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை |
|
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப, |
5 |
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, |
|
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப் |
|
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் |
|
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து, |
|
அட்டிலோளே அம் மா அரிவை- |
10 |
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, |
|
சிறு முள் எயிறு தோன்ற |
|
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே. |
உரை |
|
விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது.-மாங்குடி கிழார்
|
|