|
|
மாசு இல் மரத்த பலி உண் காக்கை |
|
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, |
|
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் |
|
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் |
5 |
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் |
|
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப, |
|
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள், |
|
தாம் நம் உழையராகவும், நாம் நம் |
|
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி, |
10 |
துஞ்சாம் ஆகலும் அறிவோர் |
|
அன்பிலர்-தோழி!-நம் காதலோரே. |
உரை |
|
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.- கழார்க் கீரன் எயிற்றியார்
|
|
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ, |
|
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட, |
|
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய் |
|
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த, |
5 |
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் |
|
கிளவியின் தணியின், நன்றுமன்-சாரல் |
|
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை, |
|
ஆடு மழை மங்குலின், மறைக்கும் |
|
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே? |
உரை |
|
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-நல்லூர்ச் சிறு மேதாவியார்
|
|
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற |
|
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் |
|
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!- |
|
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய, |
5 |
இன்னை ஆகுதல் தகுமோ-ஓங்கு திரை |
|
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி, |
|
ஏமுற விளங்கிய சுடரினும், |
|
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே? |
உரை |
|
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, ''வேறுபடாது ஆற்றினாய்'' என்று சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
|
''புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின் |
|
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண், |
|
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்'', நெஞ்சம், |
|
''செல்லல் தீர்கம்; செல்வாம்'' என்னும்: |
5 |
''செய்வினை முடியாது எவ்வம் செய்தல் |
|
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்'' என, |
|
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே, |
|
''சிறிது நனி விரையல்'' என்னும்: ஆயிடை, |
|
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய |
10 |
தேய்புரிப் பழங் கயிறு போல, |
|
வீவதுகொல் என் வருந்திய உடம்பே? |
உரை |
|
பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.- தேய்புரிப் பழங்கயிற்றினார்
|
|
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள் |
|
இரவின் வருதல் அன்றியும்-உரவுக் கணை |
|
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி, |
|
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு, |
5 |
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, |
|
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட |
|
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும் |
|
குன்ற நாடன் கேண்மை நமக்கே |
|
நன்றால் வாழி-தோழி!-என்றும், |
10 |
அயலோர் அம்பலின் அகலான், |
|
பகலின் வரூஉம், எறி புனத்தானே. |
உரை |
|
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, ''அம்ப லும் அலரும் ஆயிற்று'' என்று சொல்லியது.- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
|
|
''ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன, |
|
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி |
|
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் |
|
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்'' என, |
5 |
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து |
|
இனைதல் ஆன்றிசின்-ஆயிழை!-நினையின் |
|
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய |
|
நின் தோள் அணி பெற வரற்கும் |
|
அன்றோ-தோழி!-அவர் சென்ற திறமே? |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்
|
|
''விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி, |
|
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த; |
|
நல் எயிலுடையோர் உடையம்'' என்னும் |
|
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப் |
5 |
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், |
|
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான், |
|
காமம் பெருமையின், வந்த ஞான்றை- |
|
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம் |
|
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும், |
10 |
''தேர் மணித் தெள் இசைகொல்?'' என, |
|
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே. |
உரை |
|
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்
|
|
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு |
|
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப் |
|
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் |
|
குன்ற நாடன் பிரிவின் சென்று, |
5 |
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை |
|
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ, |
|
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில் |
|
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற் |
|
சிறு கிளி கடிகம் சென்றும், ''இந் |
10 |
நெடு வேள் அணங்கிற்று'' என்னும்கொல் அதுவே? |
உரை |
|
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.-குளம்பனார்
|
|
அம்ம வாழி, தோழி!-காதலர், |
|
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய |
|
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம் |
|
நளி கடல் முகந்து, செறிதக இருளி, |
5 |
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி, |
|
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை, |
|
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய |
|
பெரு மர ஒடியல் போல, |
|
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே. |
உரை |
|
பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது.- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
|
|
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் |
|
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் |
|
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் |
|
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் |
5 |
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! |
|
நீயே பெரு நலத்தையே; அவனே, |
|
''நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, |
|
தண் கமழ் புது மலர் ஊதும் |
|
வண்டு'' என மொழிப; ''மகன்'' என்னாரே. |
உரை |
|
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
|