|
|
''இளமை தீர்ந்தனள் இவள்'' என வள மனை |
|
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள் |
|
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள் |
|
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி |
5 |
வருந்தல் வாழி-வேண்டு, அன்னை!-கருந் தாள் |
|
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த |
|
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து, |
|
சிறு தினை வியன் புனம் காப்பின், |
|
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே. |
உரை |
|
தோழி அருகு அடுத்தது.-மதுரைக் கண்ணத்தனார்
|
|
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய |
|
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன் |
|
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை, |
|
அழல் போல் செவிய சேவல் ஆட்டி, |
5 |
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி |
|
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று, |
|
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து, |
|
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ |
|
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய |
10 |
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள் |
|
மாண்புடைக் குறுமகள் நீங்கி, |
|
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே! |
உரை |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது.-மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
|
|
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த |
|
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள, |
|
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை, |
|
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
5 |
கல் கெழு குறவர் காதல் மடமகள் |
|
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும், |
|
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம் |
|
காமம் கனிவதுஆயினும், யாமத்து |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை |
10 |
வெஞ் சின உருமின் உரறும் |
|
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே. |
உரை |
|
தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்
|
|
தான் அது பொறுத்தல் யாவது-கானல் |
|
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை |
|
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த |
|
கானல் நண்ணிய வார் மணல் முன்றில், |
5 |
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை |
|
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த |
|
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின், |
|
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு |
|
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் |
10 |
அளம் போகு ஆகுலம் கடுப்ப, |
|
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே? |
உரை |
|
தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
|
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை |
|
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் |
|
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை |
|
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் |
5 |
செம் முக மந்தி ஆரும் நாட! |
|
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், |
|
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; |
|
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில் |
|
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ |
10 |
என் கண் ஓடி அளிமதி- |
|
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! |
உரை |
|
தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.
|
|
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த |
|
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம், |
|
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி |
|
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் |
5 |
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் |
|
அசைவு இல் நோன் பறை போல, செல வர |
|
வருந்தினை-வாழி, என் உள்ளம்!-ஒரு நாள் |
|
காதலி உழையளாக, |
|
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே? |
உரை |
|
வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்
|
|
நின் குறிப்பு எவனோ?-தோழி!-என் குறிப்பு |
|
என்னொடு நிலையாதுஆயினும், என்றும் |
|
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே- |
|
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன், |
5 |
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் |
|
பீலி மஞ்ஞை ஆலும் சோலை, |
|
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை |
|
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி, |
|
நீர் அலைக் கலைஇய கண்ணிச் |
10 |
சாரல் நாடனொடு ஆடிய நாளே. |
உரை |
|
தலைமகன் வரைவு நீடிய இடத்து, ''ஆற்றுவல்'' என்பது படச் சொல்லியது; ''மனை மருண்டு வேறுபாடாயினாய்'' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-குறமகள் குறியெயினி
|
|
''பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, |
|
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, |
|
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, |
|
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம், |
5 |
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!'' என, |
|
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய், |
|
பரவினம் வருகம் சென்மோ-தோழி!- |
|
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல் |
|
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம் |
10 |
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் |
|
அரும் பெறல் ஆய் கவின் தொலைய, |
|
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே. |
உரை |
|
பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, ''இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன்'' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.- நக்கீரர்
|
|
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா |
|
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக, |
|
கன்று தாய் மருளும் குன்ற நாடன் |
|
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது |
5 |
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின், |
|
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை |
|
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப் |
|
போருடை வருடையும் பாயா, |
|
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? |
உரை |
|
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது-கபிலர்
|
|
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய |
|
விழவு ஒழி களத்த பாவை போல, |
|
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி, |
|
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர், |
5 |
சென்றீ-பெரும!-சிறக்க, நின் பரத்தை! |
|
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே |
|
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப, |
|
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும் |
|
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது |
10 |
உற்ற நின் விழுமம் உவப்பென்; |
|
மற்றும் கூடும், மனை மடி துயிலே. |
உரை |
|
பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்
|
|