(து - ம்.) என்பது, தலைவன் வரையாது இரவுக்குறி வந்தொழுகுவதனை யறிந்த தலைவி வருந்துதலும் அதுகண்ட தோழி நீ வருந்தாதே கொள், அவர் இரவில் வருவதனை யஞ்சி யாம் வரைந்து கொள்ளுவீரென்று கூறினால் நீட்டியாமல் மணந்து, நம்மையு முடன்கொண்டு தமது நாடெய்துவரெனத் தெளியக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.