பக்கம் எண் :


232


தோழி, அன்னை தினைப்புனங் காவலுக்கேகென என்னை ஏவினாள்; நுந்தையும் ஏவினமையானே யான் உடன்படேன்போல வுரையாடி வந்தேன்; ஆதலின், மீண்டு தினைப்புனங்காவலுக்கு நாம் போதலுமமையும்; தலைவனைக் கூடுதலுமாகுமென்று அவளாற்றும்படி கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
இனிதின் இனிது தலைப்படுதும் என்பது 
    
இதுகொல் வாழி தோழி காதலர் 
    
வருகுறி செய்த வரையகச் சிறுதினைச்  
    
செவ்வாய்ப் பாசினங் கடீஇயர் கொடிச்சி 
5
அவ்வாய்த் தட்டையொடு அவணை யாகென 
    
ஏயள்மன் யாயும் நுந்தை வாழியர் 
    
அம்மா மேனி நிரைதொடிக் குறுமகள் 
    
செல்லா யோநின் முள்ளெயிறு உண்கென 
    
மெல்லிய இனிய கூறலின் 1 இனியானஃது 
10
ஒல்லேன் போல உரையா டுவலே. 

    (சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; காதலர் வரு குறி செய்த வரை அகச் சிறுதினைச் செவ்வாய்ப் பாசு இனம் கடீஇயர் - நம் காதலர் வருதற்குக் குறி செய்த மலையிடத்துள்ள சிறிய தினைப்புனத்தே விழுகின்ற சிவந்த வாயையுடைய பசுங்கிளியின் கூட்டங்களை ஓட்டும் பொருட்டு; கொடிச்சி அவாய்த் தட்டையொடு அவனை ஆகு என யாயும் ஏயள் மன் - என்னை நோக்கிக் "கொடிச்சீ! நீ அழகமைந்த கிளிகடி கருவியாகிய தட்டையைக் கைக்கொண்டு அத் தினைப் புனத்துக்குச் செல்வாயாக!" என்று அன்னையும் பல முறை மிகுதியாக ஏவினள்; நுந்தை அம் மாமேனி நிரைதொடி குறுமகள் - அன்றியம் நுந்தை என்னைக் கூவி 'அழகிய மாந்தளிர் போன்ற மேனியையும் நிரைத்த வளையையும் உடைய இளமடந்தாய்!; செல்லாயோ நின் முள் எயிறு உண்கு என - 'நீ புனத்தின்கண்ணே சென்றிலையோ? விரைவிலே சென்று காண்! நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல்', என்று; மெல்லிய இனிய கூறலின் - மெல்லியவாகிய இனிய வார்த்தை கூறுதலினால்; இனி யான் அஃது ஒல்லேன் போல உரையாடுவல் - யான் இன்னும் பலகால் நம்மை வேண்டி அவர்களே புனத்தின்கண்ணே கொண்டு சென்று காவலின் உய்க்குமாறு கருதி அங்ஙனம் காவலுக்குச் செல்லமாட்டேன் போலச் சில

  
 (பாடம்) 1. 
யானஃது.