(து - ம்,) என்பது, பாங்கற்கூட்டத்துக், கற்றறிபாங்கன் தலைவனை 'நீ ஒருமடமகளாலே நின்னுள்ளமழிதலின் நினக்கு நயனும், நண்பும், நாணும், பயனும் பண்பும், பிறவுமமைந்திலவாலோ' வென்றாற்கு அவன் 'என்னெஞ்சினுள்ளாளாகிய இவ்வொருத்தியினது கண்ணைநோக்குமுன் நீ கூறியவெல்லாம் உடையேனாயிருந்தேன் கா'ணென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.
| நயனும் நண்பும் நாணும்நன்கு உடைமையும் |
| பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் |
| 1நும்மினும் உடையேன் மன்னே கம்மென |
| எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை |
5 | விதிர்த்துவிட் டன்ன அம்நுண் சுணங்கின் |
| ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன் |
| திருநுதற் பொலிந்த தேம்பாய் ஓதி |
| முதுநீர் இலஞ்சி பூத்த குவளை |
| எதிர்மலர்ப் பிணையல் அன்னவிவள் |
10 | அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே. |
(சொ - ள்.)(கம்மென?) எதிர்த்த தித்தி ஏர் இள வனமுலை விதிர்த்துவிட்டு அன்ன அம் நுண் சுணங்கின் - மேன்மேலே தோன்றிய தித்தியையும் எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கையின்மேலே அள்ளித் தெளித்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்; ஐம்பால் வகுத்த செம்பொன் திருநுதல் பொலிந்த தேம் பாய் கூந்தல் ஓதி இவள் - ஐம் பகுதியாகப்
(பாடம்) 1. | நும்மினும் அறிகுவேன். |