(து - ம்.) என்பது, களவொழுக்கத்தை மேற்கொண்டிருந்து மணம்புரியாது வினைமேற்செல்லுந் தலைமகனைத் தோழி நோக்கி, "நீ அருளினும் அருளாது விடினும் நின்வழி யொழுகுபவளாகிய தலைமகளது நெற்றியிலுண்டாகிய பசலை நோய்க்கு நீயே மருந்தென்பதறிந்து அப்பாற் செல்வாயாக" என்று செலவுமறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, " ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்" (தொல். கள. 23) என்னம் விதி கொள்க.
| தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சினைஇக் |
| கொன்ற யானைச் செங்கோடு கழாஅ |
| வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி |
| எஃகுறு பஞ்சிற் றாகி வைகறைக |
்5 | கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ |
| நல்கா யாயினும் நயனில செய்யினும் |
| நின்வழிப் படூஉமென் தோழி நன்னுதல் |
| இருந்திறை கூடிய பசலைக்கு |
| மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே. |
(சொ - ள்.) தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங் கோடு கழாஅ - முதிர்ந்த வலியுடனே பகை மிகுதலாலே சினந்து புலியைக் கொன்ற யானையின் சிவந்த தந்தம் கழுவும்படி; வழி துளி பொழிந்த இன் குரல் எழிலி எஃகு உறு பஞ்சிற்று ஆகி - வீழ்கின்ற மழையைப் பெய்த இனிய முழக்கத்தையுடைய மேகம் வில்லால் எறியப்பட்ட பஞ்சு போல் ஆகி; வைகறைக் கோடு உயர் நெடுவரை ஆடும் நாட - விடியற்காலத்திலே சிகரம் உயர்ந்த நெடிய மலையிலே இயங்காநிற்கும் நாட்டையுடையோனே!; நீ நல்காயாயினும் நயன் இல