பக்கம் எண் :


45


    
தல்ல லன்றது காதலந் தோழி 
    
தாதுண் வேட்கையிற் போதுதெரிந் தூதா 
10
வண்டோ ரன்னவவன் தண்டாக் காட்சி 
    
கண்டுங் கழல்தொடி வலித்தவென் 
    
பண்பில் செய்தி நினைப்பா கின்றே. 

    (சொ - ள்.)காதலம் தோழி - காதலையுடைய தோழி !; அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன செவ்வரி இதழ சேண்நாறு நறவின் - அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தீற்றினாற்போன்ற சிவந்த வரிபொருந்திய இதழையுடைய நெடுந்தூரம் மணங்கமழும் நறவம்பூவின், நறும்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்பொன் உரைகல்லின் நல் நிறம் பெறூஉம் வளமலை நாடன் - நறிய தாதை யளைந்த வண்டு பசிய நிறமுள்ள பொன்னை யுரைக்கும் கட்டளைக் கற்போல நல்ல நிறத்தைப் பெறாநிற்கும் வளம் பொருந்திய மலைநாடன்; நெருநல் நம்மொடு கிளைமலி சிறுதினைக் கிளி கடிந்து அசைஇ - நேற்றைப் பொழுது நம்மோடு கிளைத்தல் மிக்க சிறிய தினையில் வீழுங் கிளிகளைக் கடிந்து அங்குத் தங்கியிருந்தும்; சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் - தன்குறையைக் கூறுமிடம் பெறானாகிப் பெயர்ந்து போயினான்; அது பெயர்ந்தது அல்லல் அன்று - யான் கருதுகின்றது அங்ஙனம் அவன் பெயர்ந்ததாகிய ஓரல்லலுடைமையைக் குறித்ததன்று காண் !; தாது உண் வேட்கையின்போது தெரிந்து ஊதா வண்டு ஓரன்னவன் - தேனையுண்ணும் வேட்கையாலே நறுமலர் இன்னதென ஆராயாது யாண்டும் போய் விழுகின்ற வண்டின் ஒரு தன்மையை யொத்த அவனது; தண்டாக் காட்சி கண்டும் - கெடாத தோற்றப் பொலிவினைக் கண்டு வைத்தும்; கழல் தொடி வலித்த என் பண்புஇல் செய்தி நினைப்பு ஆகின்று - கழன்ற தொடியை மீண்டு செறித்த எனது பண்பில்லாத செய்கையைக் கருதா நின்றது என்னுள்ளம்; இஃதென்ன வியப்பு !; எ - று.

    (வி - ம்.)அவ்வளை - அழகியவளை. வெரிந் - முதுகு. அசைதல் - தங்குதல். யான் கருதியது அவன்பட்ட அல்லலையன்று; என் பண்பில் செய்தி நினைப்பாகின்று என்க. வேட்கையாற் போது தெரிந் தூதாத வண்டோரன்ன அவனென்றது உரிமைபூணத் தகுதிப்பாடில்லாத என்பாற் கருத்துடையா னென்றதாம். தண்டாக்காட்சி யென்றது அவனது தோற்றப் பொலிவு ஏனைய மகளிரும் விரும்புந் தன்மையதென்றதாம். இருவர்நோக்கும் இயையாதவழிக் காமஞ்சிறவாதாகலின் அவன் நோக்கு இயையாமையைக் கண்டுவைத்தும் என் தொடிகழன்றன என்றலின் என்பண்பில் செய்தி என்றதாம். இனி அவனுக்கு உடன்பட்டுக் கூறாமையால் என்செய்தி பண்பில் செய்தி யெனலுமாம்.

    இது குறைநயப்பாமாறு :- தோழி இங்ஙனம் தான் அவனைக் காமுற்றதாகக் கேட்ட தலைவி (தன்னுள்ளே) நம் காதலனை இவள்,