பக்கம் எண் :


485


    திணை : பாலை.

    துறை : இது, பொருண் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, பொருள்வயிற்சென்ற தலைமகன் தலைவியை நினைந்து ஆற்றான் ஆகி 'என் நெஞ்சமானது தலைவிபாற் செல்லுவோமென்னாநின்றது, என் அறிவானது பொருள்முடித்துப் போவோமாதலின், அதற்குள் விரையாதே என்கின்றது. இவ்விரண்டும் பகை கொண்டதனால் இடையிலுள்ள என் உடம்பு அழியவேண்டுவதுதான் போலும்' என இடைச்சுரத்து அழுங்கிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
புறந்தாழ்பு இருண்ட கூந்தற் போதின் 
    
1 நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண் 
    
உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் 
    
செல்லல் தீர்க்கஞ் செல்வாம் என்னுஞ் 
5
செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல் 
    
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென 
    
உறுதி் தூக்கத் தூங்கி அறிவே 
    
சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை 
    
ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய 
10
தேய்புரிப் பழங்கயிறு போல 
    
வீவது கொல்என் வருந்திய வுடம்பே. 

    (சொ - ள்.) நெஞ்சம் புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் - என் நெஞ்சமானது புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும் நெய்தல் மலர் போன்ற நிறம் விளங்கிய ஈரிய இமைபொருந்திய மையுண்ட கண்ணையும் உடைய; உள்ளம் பிணிக்கொண்டோள் வயின் செல்வாம் செல்லல் தீர்க்கம் என்னும் - என் உள்ளத்தைப் பிணித்துப் பற்றிக்கொண்டவளிடத்து யாம் செல்வோம், சென்று அவளுடைய இன்னாமையைத் தீர்ப்போம் என்று கூறாநிற்கும்; அறிவு செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என - அப்பொழுது என் அறிவானது நாம் எடுத்த காரியத்தை முடிவுபெறப் போக்காமல் இடையில் இகழ்ந்து விட்டு விடுதலானது அறியாமையுடனே இகழ்ச்சியையும் கொடாநிற்கும் என; உறுதி தூக்கத் தூங்கி

 (பாடம்) 1. 
நிறங்கிளர் நிறையிதழ்.