(து - ம்,) என்பது, தோழி கற்பியலிலே பொருள்வயிற் பிரிகின்ற தலைமகனது குறிப்பறிந்து 'தலைவனே! உலகம் படைத்தகால முதலாகப் பொருளீட்டி வாழ விரும்புவோர் தம்மை அடைக்கலம் புகுந்தாரைப் பாதுகாக்க வேண்டும் என்னும் அறநெறியை மறந்தனரோ? அவர் சிறந்தவரே போலு'மென்று பிறர்மேல் வைத்து அவனது செலவு விலக்குவாளாய் மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.
துறை : (2) தோழி உலகியல் கூறிப் பிரிவுணர்த்தியதூஉமாம்.
(து - ம்,) என்பது, பொருளீட்டுமாறு பிரிபவர் பிரியவேண்டுபவரே; ஆயினும், அடைந்தாரைக் காப்பது மேலான அறமன்றோ? அதனை "மறந்தனரல்லர் சான்றோ'ரெனக் கூறாநிற்பதுமாகும்.
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதுவுமது.
| உலகம் படைத்த காலைத் தலைவ |
| மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே |
| முதிரா வேனில் எதிரிய அதிரல் |
| பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர் |
5 | நறுமோ ரோடமொடு உடனெறிந்து அடைச்சிய |