(து - ம்.) என்பது, களவின் வழிவந்தொழுகுந் தலைமகன் ஒரோவொருகால் அருகி வருதலை யறிந்த தோழி அவனது அருகில் நெருங்கி, 'என் தோழியை நீ விரும்பி முயங்கி இன்புறா யாயினும், என்பால் நீ கொண்ட அன்பின் மிகுதியினாலேனும் கைசோர விடாது அவளை அணைந்து தலையளி செய்வாயாக; நீயே களைகணன்றி அவள் பிறிதுடையளல்ல'ளென்பதுபடக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் பாங்கு என்றதனாற் கொள்க.
துறை : (2) தோழி தலைமகளது ஆற்றாமைகண்டு வரைவுகடாயதூஉமாம்.
(து - ம்.)என்பது, வெளிப்படை.
(உரை இரண்டற்கு மொக்கும்.)