(து - ம்.) என்பது, மணஞ் செய்துகொள்வலென்று அகன்ற தலைமகன் நீட்டித்து வாராமையால் வருந்திய தலைமகளைத் தோழி இன்னபொழுது வரையுமெனக் கூறி வலியுறுத்தியதூஉமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்.) இதற்கு, "ஆங்கதன் தன்மையின் வன்புறை உளப்பட" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| கடுஞ்சுறா எறிந்த கொடுந்தாள் தந்தை |
| புள்இமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென |
| மனையழுது ஒழிந்த புன்தலைச் சிறாஅர் |
| துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின் |
5 | பணைகொள் வெம்முலை பாடுபெற்று உவக்கும் |
| பெண்ணை வேலி உழைகண் சீறூர் |
| நன்மனை அறியின் நன்றுமன் தில்ல |
| செம்மல் நெஞ்சமொடு தாம்வந்து பெயர்ந்த |
| கானலொடு அழியுநர் போலாம் பால்நாள் |
10 | முனிபடர் களையினுங் களைப |
| நனிபேர் அன்பினர் காத லோரே. |
(சொ - ள்.) கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாள் தந்தை - கொடிய சுறாமீனை வலையிட்டுப் பிடிக்கின்ற கடிய முயற்சியுடைய தந்தை; புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்று என - நீர்க்காக்கைகள் ஒலிக்கின்ற பெரிய கடலின்கண் வேட்டைக்குச் செல்கின்றவன் உடன்கொண்டு செல்லானாய் நிறுத்திவிட்டுச் சென்றதனாலே; மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் - மனையின்கண் இருந்தபடி தந்தையுடன் செல்ல விரும்பி அழுதுநின்ற மெல்லிய தலையையுடைய சிறுவர்; துனையதின் முயன்ற தீம் கண்நுங்கின் பணைகொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் - ஆங்கு விரைய முயற்சியாலே கிடைத்த இனிய கண்ணையுடைய பனைநுங்காகிய பருத்தமைந்த விருப்பம் வரும் கொங்கையின் பயனைப்பெற்று மகிழாநிற்கும்; பெண்ணை வேலி உழை கண் சீறூர் நல் மனை அறியின் - பனையோலையிட்டு விசித்த வேலி சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய சிறிய ஊரிலுள்ள நல்ல நமது மனையகத்தை நங்காதலர் அறியின்; நன்றுமன் - நல்லதேயாம், அஃது அனைவேமும் விரும்பத் தக்கதொன்றாம்; காதலோர் நனி பேர் அன்பினர் - எவ்வாறெனின் அத்தகைய காதலர் நம்பால் மிகப் பெரிய அன்புடையராதலால்; பால் நாள் முனி படர் களையினுங் களைப - இரவு நடு யாமத்தில் நம்மை வருந்துந் துன்பத்தைப் போக்கவேண்டுமெனினும் அவ் வண்ணமே செய்யவல்லவர்காண்; தாம் செம்மல் நெஞ்சமொடு வந்து பெயர்ந்த கானலொடு அழியுநர் போலாம் - அவர்