பக்கம் எண் :


242


     5. மீன் வேட்டம்: “புன்றலை யிரும்பரதவர் ... பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது” (பட். 90-92); “கோட்டுமீ னெறிந்த வுவகையர் வேட்டமடிந், தெமரு மல்கினர்”.

     “எல்லிமிழ் பனிக்கடன் மல்குசுடர்க் கொளீஇ, எமரும் வேட்டம் புக்கனர்”, “கோட்சுறாக் குறித்த முன்பொடு, வேட்டம் வாயா தெமர்வா ரலரே,” “திண்டிமிற் பரதவ ரொண்சுடர்க் கொளீஇ, நடுநாள் வேட்டம் போகி” (நற்.49:5-6, 67:8-9, 215:1-2, 388:4-5); “பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்”, “கோட்டு மீன் வழங்கும் வேட்டமடி பரப்பு” (அகநா. 140:170:11); அகநா. 10:11; புறநா.399:5.

     மீன்வேட்டையாடுவார் திமில் : குறுந்.304:4.

     4-5. மீன்வேட்டம் புக்கார் திமிலில் வருதல்: “எந்தை திமிலிது நுந்தை திமிலென, வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர், திண்டிமி லெண்ணும்” (நற். 331:6-8); “ஏற்பட, வருதிமில்” (அகநா.190:2-3.)

(123)
  
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “பாலை நிலம் இவளை வருத்தற்கு உரியதன்று: இன்னாமையையுடையது” என்று கூற, “தலைவரைப் பிரிந்தாருக்கு வீடுமட்டும் இனிமையையுடையதோ?” என்று வினவு முகத்தால் தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி அறிவித்தது.)
 124.    
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை 
    
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா 
    
டின்னா வென்றி ராயின் 
    
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே 

என்பது புணர்ந்துடன் போக்கினைத் தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.

    (தலைமகள் ஒழிய - தலைவி தனியே இருப்ப. புணர்ந்து உடன் போக்கினைத் தோழி சொல்லியதென இயைக்க. புணர்ந்துடன் போக்கு: தொல். கற்பு.2.)

பாலைபாடிய பெருங்கடுங்கோ.

     (பி-ம்.) 1. ‘உமணர்ச் சேர்ந்து’; 2-3. ‘பெருங் காட்டின்னா’: 4. ‘தமியேற்கு’.

     (ப-ரை.) பெரும - தலைவ, உமணர் - உப்பு வாணிகர், சேர்ந்து கழிந்த மருங்கின் - பலர் கூடிக் கடந்து சென்ற பக்கத்தையும், அகன்றலை - விரிந்த இடத்தையும் பெற்ற, ஊர் பாழ்த்தன்ன - குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய, ஓமை பெரு காடு - ஓமை மரங்கள் வளர்ந்த பெரிய பாலை நிலங்கள், இன்னா - இன்னாமையையுடையன, என்றிராயின் - என்று கூறித்