பக்கம் எண் :


313


    (மேற்கோளாட்சி) மு. கடலொடு கவலல (களவியற்.)

    ஒப்புமைப் பகுதி 2. சிறுதலை வெள்ளைத்தோடு: “இடையன், சிறுதலையாயமொடு குறுகல் செல்லா” (புறநா. 54: 11-2.)வெள்ளை:அகநா. 104:9, 107, 156.14. ஆட்டின் தோடு:“ஆடுதலைத் துருவின் றோடு” (அகநா. 274:4.) 3.மீனார் குருகு:அகநா.40:3. கானலம்பெருந்துறை: அகநா. 90:3, 280:14. மு. அகநா.300:4.

    4. தாழையின்மலர் திரையால் அலைக்கப்படுதல்: “தயங்குதிரை பொருத தாழை வெண்பூ” (குறுந். 226:5.)

    நள்ளென் கங்குல்: குறுந். 6:1, ஒப்பு; 160:4, ஒப்பு.

 மு. 
“பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் 
  
 தூவறத் துறந்தனன் றுறைவனென் றவன்றிறம் 
  
 நோய்தெற வுழ பார்க ணிமிழ்தியோ வெம்போலக் 
  
 காதல்செய் தகன்றாரை யுடையையோ நீ”        (கலி. 129:8-11); 
  
“மணிநிற நெய்த லிருங்கழிச் சேர்ப்பன் 
  
 அணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போற் 
  
 றிணிமண லெக்கர்மே லோதம் பெயரத் 
  
 துணிமுந்நீர் துஞ்சா தது”                           (ஐந். எழு. 60); 
  
“பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர் 
  
 ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத் 
  
 தீங்கணைந் தோரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே 
  
 ஆங்கணைந் தோர்நின் னையுமுள ரோசென் றகன்றவரே”(திருச்சிற். 179); 
  
“காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே 
  
 யாமுற்ற துற்றா யிருங்கடலே - யாமத்து 
  
 ஞாலத் துயிரெல்லாங் கண்டுஞ்சு நள்ளிருள்கூர் 
  
 காலத்துந் துஞ்சாதுன் கண்”                        (கைலைபாதி. 64); 
  
“தன்போற் சினத்துரு மேந்திய கோன்கன்னித் தண்டுறையும்  
  
 பொன்போன் மலர்புன்னைக் கானலு நோக்கிப் புலம்புகொண்ட 
  
 என்போ லிரவினெல் லாந்துயி லாதுநின் றேங்குதியால் 
  
 அன்போ டொருவற் கறிவழிந் தாயோ லைகடலே”         (பாண்டிக்.); 
  
“உன்னையு நீத்தகன்றா ருண்டோ வுடல்கருகிப் 
  
 புன்னை கமழும் பொருகடலே - என்னைப்போல் 
  
 நெஞ்சா குலம்பெருகி நீயு மிரவெல்லாம் 
  
 துஞ்சாத தென்கொலோ சொல்”                     (கிளவித்தெளிவு.) 

குறிப்பு: இத்தகைய செய்யுட்கள் பல பிற்காலத்துப் பிரபந்தங்களில் உண்டு; திவ். திருவாய். 2. 1:3 முதலியன.

(163)
  
(தலைவி தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட காதற்பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழியை நோக்கிக் கூறுவாளாய், “தலைவி குறை கூறுதற்குரிய குற்றம் உடையேமெனின் எம்மைக் கடல் வருத்துக” என்று சொல்லியது.)