பரணர். (பி-ம்.) 6. ‘வாய்போலப்’; 8. ‘நின்னுயிர் நானே’.
(ப-ரை.) மழை சேர்ந்து எழு தரும் - மேகங்கள் சேர்ந்து எழுந்த, மாரி குன்றத்து - மழையை உடைய மலையின் இடத்துள்ள, அருவி ஆர்ந்த - அருவிக்கு அருகில் பொருந்திய,தண் நறு காந்தள் முகை அவிழ்ந்து - தண்ணிய நறிய காந்தளரும்புகள் விரிந்து, ஆனா நாறும் நறுநுதல் - அமையாதனவாய் மணம் வீசுகின்ற நறிய நெற்றியையும்,