| “முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின |
| தலைமுடி சான்ற தண்டழை யுடையை |
| ....... ........ ........ ......... |
| பேதை யல்லை மேதையங் குறுமகள் |
| பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென” (அகநா. 7:1-7.) |
கிழக்கு - கீழ் (குறள். 488.) பல் செறிந்திருத்தல் அழகு பயப்பது;“செறியெயிற் றரிவை” (குறுந். 2:4) என்று முன் வந்தது காண்க. பறிமுறை - விழுந்தெழுந்த முறைமை (கலி. 93:19, ந.) அணங்குதற்கு யான் தன் அறிவலென்றது, யான் அவளது அழகு முதலியவற்றை அறிந்த காரணத் தாலே அணங்கினாளென்றபடி; இதனால் யான் அறியாது வாளா சென்றே னெனின் அணங்கப்படேனென்பதும் போதரும். அணங்குதற்கு - அணங்குதலாலென உருபுமயக்கமாக்குதலும் ஒன்று.
பல்லும், சுணங்கும்: உம், இறந்தது தழீஇயது.
(மேற்கோளாட்சி) 2. கிழக்கென்பது கீழென்னும் பொருளில் வந்தது (தொல். உவம. 5, பேர்.)
5. பின்னின்ற தலைமகன் கூறியதனால், தன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரலென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 6, பேர்; இ. வி. 578.)
5-7. தலைமகள் கட்டுரையாதிருத்தலின் தலைமகன் தமரின் எய்தல்வேண்டினமையின் கட்டுரையின்மையின் வரைவுகடாதலாயிற்று (தொல். மெய்ப். 23, பேர்.)
மு. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைதல் வேண்டிக்கூறியது (தொல். களவு. 11, இளம்.); புணர்தல் நிமித்தம் வந்தது (தொல்.அகத். 14, ந.); இறையோன் இறைவி தன்மை இயம்பியது (நம்பி. 144.)
ஒப்புமைப் பகுதி 1. முகிழ் முகிழ்த்தல்: ‘அம்பலென்பது முகிழ் முகிழ்த்தல்’ (இறை. 22, உரை.)
3. பல் பறிமுறை நிரம்புதல்: “நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த, செறிமுறை பாராட்டி னாய்மற்றெம் பல்லின், பறிமுறை பாராட்டினையோ வைய” (கலி. 22:9-11.) 5. குறுந். 142:2-3.
6. யாங்காகுவள்: குறுந். 159:5, ஒப்பு.
(337)
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “தலைவன்வந்தான்” என்று துணிவுபற்றிக் கூறித் தோழி ஆற்றுவித்தது.) 338. | திரிமருப் பிரலை யண்ண னல்லே |
| றரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ |
| வீததை வியலரிற் றுஞ்சிப் பொழுதுசெலச் |
| செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப் |
5 | பின்பனிக் கடைநாட் டண்பனி யச்சிரம் |
| வந்தன்று பெருவிற றேரே பணைத்தோள் |
| விளங்குநக ரடங்கிய கற்பின் |
| நலங்கே ழரிவை புலம்பசா விடவே. |