பக்கம் எண் :


653


தன்னென்றது தலைவனை. தெற்றென - யான் தலைவனை அகப் படுத்தலின்றி அவன் தானே வலிய என்பாற் படுடிதல் விளங்கும்படி.

     துணங்கை - மகளிர் விளையாட்டில் ஒன்று; இந்நூல் 31-ஆம்செய்யுளைப் பார்க்க. அத்துணங்கையில் தலைவன் தலைக்கை தருவான்.

     விழாவில் துணங்கையும் மள்ளர் போரும் ஒருங்கே நிகழும் (குறுந். 31; கலித். 27:19-20, 24, 30:13-4.)

     ஒப்புமைப் பகுதி 1. அரிற்பவர்ப் பிரம்பு: குறுந். 91:1.

     1-2. நீர்நாய் வாளை நாளிரை பெறுதல்: “பொய்கைப் பள்ளிப்புலவுநாறு நீர்நாய், வாளை நாளிரை பெறூஉ மூர” (ஐங். 63:1-2);“நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய், வாளையொ டுழப்ப”, “பொய்கை நீர்நாய்ப் புலவுநா றிரும்போத்து, வாளை நாளிரை தேரு மூர” (அகநா. 336:4-5, 386:1-2); “வாளை நீர்நாய் நாளிரை பெறூஉ” (புறநா.283:2);பெரிய. 38:115; கம்ப. பம்பைப். 22.

     3. கோல் அவிர்தொடி: குறுந். 356:8, ஒப்பு. தகுவி: அகநா. 196:13.

     6. வணங்கிறைப் பணைத்தோள்: புறநா.32:3. பணைத்தோள்:குறுந். 268:6, ஒப்பு.

     5-6. மகளிர் துணங்கை: குறுந். 31:2, ஒப்பு.

     5-8. தலைவன் பரத்தையரோடு துணங்கையயர்தல்: நற். 50: 1-3; கலி. 66: 17-8, 70: 13-4, 73: 16-7; அகநா. 176:15. மு. அகநா. 336.

(364)
  
(''யான் வரையுமவ்வளவும் தலைவி ஆற்றுவளோ?” என்று கேட்டதலைவனை நோக்கித் தோழி, “இவள் ஆற்றாள்” என்பது படச்சொல்லியது.)
 365.    
கோடீ ரிலங்குவளை நெகிழ நாளும்  
    
பாடில கலிழ்ந்து பனியா னாவே  
    
துன்னரு நெடுவரைத் ததும்பிய வருவி  
    
தண்ணென் முரசி னிமிழிசை காட்டும்  
5
மருங்கிற் கொண்ட பலவிற்  
    
பெருங்க னாடநீ நயந்தோள் கண்ணே. 

என்பது “யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?” என்று வினாய கிழவற்குத் தோழி சொல்லியது.

மதுரை நல்வெள்ளி.

     (பி-ம்.) 1.'நாடொறும'்; 2. 'கழிந்து', 'கலுழுந்துனியானாவே';3. 'ததும்பியருவ'ி; 4.'தண்ணென் முழவின'்; 5.'னாடனீ', 'னாடநின்'.

     (ப-ரை.) துன் அரு நெடு வரை ததும்பிய அருவி - அணுகுதற்கரிய நெடிய மலைப்பக்கத்திலே ஒலித்தஅருவியானது, தண்ணென் முரசின் - தண்ணென்ற ஒலியையுடைய முரசைப்போல, இமிழ் இசை காட்டும் - ஒலிக்கின்ற