பக்கம் எண் :


687


     (முடிபு) தோழி, நாடன் வரைந்தென நன்றோ என்றனென்;நன்றேபோலும் என்றுரைத்தோன் ஆர்பதம் பெறுக!

     (கருத்து) தலைமகனுடைய குற்றேவன்மகனால் தலைவன் வரைவு மேற்கொண்டமையை யுணர்ந்தேன்.

     (வி-ரை.) நெய்யிற் பொரிக்கப்படுதலின் நெய்கனிந்தது.குற்றேவன்மகனுக்கு ஏற்ற உணவு கூறினாள்.

    அததை: அசை நிலை.நன்றே: ஏ தேற்றம்.போலும்: அசை நிலை. உரைத்தோனென்பதை முற்றாக்கினும் பொருந்தும்.

    (மேற்கோளாட்சி) மு. தலைவன் குற்றேவன்மகனால் வரைவுமலிந்த தோழி தலைவிக்கு உரைத்தது. (தொல். களவு. 23, ந.)

    ஒப்புமைப் பகுதி 2. ஆர்பதம்: குறுந். 83:1, ஒப்பு.

    3. பெருங்கடல் நாடன்: சிறுபாண். 87.

    மு. நன்மை செய்தோரைவாழ்த்துதல்: குறுந். 83, 201.

(389)
(பாலைநிலவழியே சேர்ந்துபோகும் தலைவனையும் தலைவியையும் கண்டோர், “பொழுது போயிற்று; ஆறலை கள்வரால் ஏதம் நிகழும்”என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.)
 390.    
எல்லு மெல்லின்று பாடுங் கேளாய் 
    
செல்லா தீமோ சிறுபிடி துணையே 
    
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென 
    
வளையணி நெடுவே லேந்தி 
5
மிளைவந்து பெயருந் தண்ணுமைக் குரலே. 

என்பது புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது (பி-ம். இப்பொழுது) செலவும் பகையுங் காட்டிச் செலவு விலக்கியது.

உறையூர் முதுகொற்றன்.

     (பி-ம்) 2. ‘சொல்லாதீமோ’; 5. ‘இளைவந்து’.

    (ப-ரை.) சிறுபிடி துணையே - சிறிய பிடிபோன்ற வளுக்குத் துணையாகியவனே, எல்லும் எல்லின்று -சூரியனும் விளக்கம் இலனானான், சாத்து வந்து இறுத்தென -வணிகர்கூட்டம் வந்து அடைந்ததாக, வேற்று முனை வெம் மையின் - பகைப்புலத்தே கொள்ளும் பகைமையைப் போல, வளை அணி நெடு வேல் ஏந்தி - வளையை யணிந்த நெடிய வேலை ஏந்தி, மிளை வந்து - காவற்காட்டினிடத்தே வந்து,பெயரும் தண்ணுமை குரல் - பெயரும் ஆறலைப்போரதுதண்ணுமையென்னும் வாத்தியத்தினுடைய முழக்கத்தினது,