171 | | திரை இமிழ் இன் இசை அளைஇ, அயலது | | முழவு இமிழ் இன் இசை மறுகுதொறு இசைக்கும் | | தொண்டி அன்ன பணைத் தோள், | | ஒண் தொடி, அரிவை என் நெஞ்சு கொண்டோளே! | |
| இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் ஆயத்தோடு சொல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது. 1 | | |
|
|
172 | | ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே! | | வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் | | உரவுக் கடல் ஒலித் திரை போல, | | இரவினானும் துயில் அறியேனே! | |
| 'கண் துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?' என்று வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 2 | | |
|
|
173 | | இரவினானும் இன் துயில் அறியாது | | அரவு உறு துயரம் எய்துப தொண்டித் | | தண் நறு நெய்தல் நாறும் | | பின் இருங் கூந்தல் அணங்குற்றோரே. | |
| தலைமகன் குறிவழிச் சென்று தலைமகளைக் கண்ட பாங்கன் தன்னுள்ளே சொல்லியது. 3 | | |
|
|
174 | | அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன | | மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்குஇழை | | பொங்கு அரி பரந்த உண்கண், | | அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே. | |
| குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டு வந்த பாங்கன், 'அவள் நின்றுழி நின்றாள்' என்று கூறியவழி, ஆண்டுச் செல்லக் கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. 4 | | |
|
|
175 | | எமக்கு நயந்து அருளினைஆயின், பணைத் தோள் | | நல் நுதல் அரிவையொடு மென்மெல இயலி, | | வந்திசின் வாழியோ, மடந்தை! | | தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே. | |
| பாங்கற் கூட்டங் கூடி நீங்கும் தலைமகன், 'இனி வருமிடத்து நின் தோழியோடும் வர வேண்டும்' எனத் தலைமகட்குச் சொல்லியது. 5 | | |
|
|
176 | | பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித் | | தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி, | | ஐது அமைந்து அகன்ற அல்குல், | | கொய் தளிர் மேனி! கூறுமதி தவறே. | |
| தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழிச் சென்ற தலைமகன், 'இவள் என்னை இவை கோடற்குக் காரணம் என்?' என்று தோழியை வினாவியது. 6 | | |
|
|
177 | | தவறு இலராயினும், பனிப்ப மன்ற | | இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங் கோட்டு | | முண்டக நறு மலர் கமழும் | | தொண்டி அன்னோள் தோள் உற்றோரே. | |
| தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழி, 'இவள் என்னை வருத்துதற்குச் செய்த தவறு என்?' என்று வினாய தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 7 | | |
|
|
178 | | தோளும் கூந்தலும் பல பாராட்டி, | | வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் | | குட்டுவன் தொண்டி அன்ன | | எற் கண்டு நயந்து நீ நல்காக்காலே? | |
| தலைமகன் தோழியை இரந்து குறையுறுவான் சொல்லியது. 8 | | |
|
|
179 | | நல்குமதி, வாழியோ! நளி நீர்ச் சேர்ப்ப! | | அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும் | | இன் ஒலித் தொண்டி அற்றே, | | நின் அலது இல்லா இவள் சிறு நுதலே. | |
| குறியிடத்து வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது. | | |
|
|
180 | | சிறு நணி வரைந்தனை கொண்மோ பெருநீர் | | வலைவர் தந்த கொழுமீன் வல்சிப் | | பறை தபு முது குருகு இருக்கும் | | துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே. | |
| தாழ்த்து வரையக் கருதிய தலைமகனைத் தோழி நெருங்கி, 'கடிதின் வரைய வேண்டும்' எனச் சொல்லியது. 10 | | |
|
|