தொடக்கம்   முகப்பு
241 - 250 வெறிப்பத்து
241
நம் உறு துயரம் நோக்கி, அன்னை
வேலன் தந்தனள் ஆயின், அவ் வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே!
இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு, 'இஃது எற்றினான் ஆயிற்று?' என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 1
 
243
கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி,
அறியா வேலன், 'வெறி' எனக் கூறும்;
அது மனம் கொள்குவை, அனை! இவள்
புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே.
தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. 3
 
245
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும்ஆயின்,
கெழுதகைகொல் இவள் அணங்கியோற்கே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. 5
 
248
பெய்ம்மணல் முற்றம் கவின் பெற இயற்றி,
மலை வான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினான் அறிகுவது என்றால்,
நன்றால்அம்ம, நின்ற இவள் நலனே!
'தலைமகள் வேறுபாடு கழங்கினால் தெரியும்' என்று வேலன் கூறியவழி, அதனைப் 'பொய்' என இகழ்ந்த தோழி வெறி விலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8
 
250
பொய் படுபு அறியாக் கழங்கே! மெய்யே
மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளிஅம் கானங் கிழவோன்;
ஆண்தகை விறல் வேள் அல்லன் இவள்
5
பூண் தாங்கு இளமுலை அணங்கியோனே.
'தலைமகட்கு வந்த நோய் முருகனால் வந்தமை இக் கழங்கு கூறிற்று' என்று வேலன் சொன்னான் என்பது கேட்ட தோழி அக் கழங்கிற்கு  ப்பாளாய், செவிலி கேட்குமாற்றால் அறத்தொடுநிலை குறித்துச் சொல்லியது. 10
 
மேல்