311 | | வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும், | | ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம் | | காடு இறந்தனரே காதலர்; | | 'நீடுவர்கொல்' என நினையும், என் நெஞ்சே! | |
| 'ஆற்றது அருமை நினைந்து, நீ ஆற்றாயாதல் வேண்ட; அவர் அவ்வழி முடியச் சென்றார்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 1 | | |
|
|
312 | | அறம் சாலியரோ! அறம் சாலியரோ! | | வறன் உண்டாயினும், அறம் சாலியரோ! | | வாள் வனப்பு உற்ற அருவிக் | | கோள் வல் என்னையை மறைத்த குன்றே. | |
| உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி, 'நின் ஐயன்மார் பின் துரந்து வந்த இடத்து நிகழ்ந்தது என்னை?' என்ற தோழிக்கு நிகழ்ந்தது கூறி, தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது. 2 | | |
|
|
313 | | தெறுவது அம்ம, நும் மகள் விருப்பே | | உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய், | | பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க, | | நாடு இடை விலங்கிய வைப்பின் | 5 | காடு இறந்தனள், நம் காதலோளே! | |
| தலைமகள் புணர்ந்து உடன்போகியவழி, செவிலி ஆற்றாமை கண்ட நற்றாய் அவட்குச் சொல்லியது. 3 | | |
|
|
314 | | 'அவிர் தொடி கொட்ப, கழுது புகவு அயர, | | கருங் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ, | | சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும் | | நீள் இடை அருஞ் சுரம்' என்ப நம் | 5 | தோள் இடை முனிநர் சென்ற ஆறே. | |
| தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களில் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
|
|
315 | | பாயல் கொண்ட பனி மலர் நெடுங் கண் | | பூசல் கேளார் சேயர் என்ப | | இழை நெகிழ் செல்லல் உறீஇ, | | கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே. | |
| சொல்லாது தலைமகன் பிரிந்துழி, தலைமகள் வேறுபாடு கண்ட தோழி இரங்கிச் சொல்லியது. 5 | | |
|
|
316 | | பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்த, | | தேர் அகல் அல்குல் அவ் வரி வாட, | | இறந்தோர்மன்ற தாமே பிறங்கு மலைப் | | புல் அரை ஓமை நீடிய | 5 | புலி வழங்கு அதர கானத்தானே. | |
| தலைமகள் மெலிவுக்கு நொந்து, தலைமகன் பிரிவின்கண் தோழி கூறியது. 6 | | |
|
|
317 | | சூழ்கம் வம்மோ தோழி! பாழ்பட்டுப் | | பைது அற வெந்த பாலை வெங் காட்டு | | அருஞ் சுரம் இறந்தோர் தேஎத்துச் | | சென்ற நெஞ்சம் நீடிய பொருளே! | |
| தலைமகன் பிரிந்து நீட்டித்துழி, நெஞ்சினைத் தூது விட்ட தலைமகள், அது வாராது தாழ்த்துழி, தோழிக்குச் சொல்லியது. 7 | | |
|
|
318 | | ஆய் நலம் பசப்ப, அரும் படர் நலிய, | | வேய் மருள் பணைத் தோள் வில் இழை நெகிழ, | | நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து | | ஓடு எரி நடந்த வைப்பின், | 5 | கோடு உயர் பிறங்கல், மலை இறந்தோரே. | |
| 'நம்மைப் பிரியார்' என்று கருதியிருந்த தலைமகள், அவன் பிரிந்துழி, இரங்கிச் சொல்லியது. 8 | | |
|
|
319 | | கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின், | | மண் புரை பெருகிய மரம் முளி கானம் | | இறந்தனரோ நம் காதலர்? | | மறந்தனரோதில் மறவா நம்மே? | |
| தலைமகன் பிரிந்துழி, அவன் உணர்த்தாது பிரிந்தமை கூறிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9 | | |
|
|
320 | | முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ, | | முழங்குஅழல் அசைவளி எடுப்ப, வானத்து | | உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும் | | கவலை அருஞ் சுரம் போயினர் | 5 | தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே. | |
| தலைமகன் பிரிந்துழிச் சுரத்து வெம்மை நினைந்து, தலைமகள் சொல்லியது. 10 | | |
|
|