| 351 | | அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய், | | அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும் | | காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி | | பல் இதழ் உண்கண் மடந்தை! நின் | 5 | நல் எழில் அல்குல் வாடிய நிலையே. | |
| | பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1 |
|
|
|
|
| 352 | | விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர் | | எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப் | | பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும் | | வெஞ் சுரம் 'அரிய' என்னார், | 5 | வந்தனர் தோழி! நம் காதலோரே! | |
|
|
|
|
| 52 | | வயலைச் செங் கொடிப் பிணையல் தைஇச் | | செவ் விரல் சிவந்த சேயரி மழைக் கண் | | செவ் வாய்க் குறுமகள் இனைய; | | எவ் வாய் முன்னின்று மகிழ்ந! நின் தேரே? | |
| | வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 2 | | |
|
|
|
| 54 | | திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை | | வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் | | தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ, | | ஊரின் ஊரனை நீ தர, வந்த | 5 | பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு | | அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே. | |
| | வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4 | | |
|
|
|
| 55 | | | கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும், | | | தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள் | | | நல் அணி நயந்து நீ துறத்தலின், | | | பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே. | | | வரைந்த அணிமைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து, தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 5 | | |
|
|
|
| 56 | | | பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா, | | | வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள் | | | நலம்பெறு சுடர் நுதல் தேம்ப, | | | எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே? | | | புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6 | | |
|
|
|
| 59 | | | கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற, | | | மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர | | | நினக்கு மருந்து ஆகிய யான், இனி, | | | இவட்கு மருந்து அன்மை நோம், என் நெஞ்சே. | | | தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி ஆற்றாளாகிய தோழி சொல்லியது. 9 | | |
|
|
|