391 | | மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை! | | அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப் | | பச்சூன் பெய்த பைந் நிண வல்சி | | பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ; | 5 | வெஞ்சின விறல் வேல் காளையொடு | | அம்சில் ஓதியை வரக் கரைந்தீமே. | |
| உடன்போகிய தலைமகள் மீடற்பொருட்டு, தாய் காகத்திற்குப் பராய்க்கடன் த்தது. 1 | | |
|
|
392 | | வேய் வனப்பு இழந்த தோளும், வெயில் தெற | | ஆய்கவின் தொலைந்த நுதலும், நோக்கிப் | | பரியல் வாழி, தோழி! பரியின், | | எல்லை இல் இடும்பை தரூஉம் | 5 | நல் வரை நாடனொடு வந்தமாறே. | |
| உடன்போய் மீண்டு வந்த தலைமகள் வழிவரல் வருத்தங் கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குச் சொல்லியது. 2 | | |
|
|
393 | | துறந்ததற் கொண்டு துயர் அடச் சாஅய், | | அறம் புலந்து பழிக்கும் அளைகணாட்டி! | | எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக | | வந்தனளோ நின் மட மகள் | 5 | வெந் திறல் வெள் வேல் விடலை முந்துறவே? | |
| உடன்போய்த் தலைமகள் மீண்டு வந்துழி, அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது. 3 | | |
|
|
394 | | மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த | | அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற; | | வெஞ் சுரம் இறந்த அம் சில் ஓதி, | | பெரு மட மான் பிணை அலைத்த | 5 | சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே. | |
| உடன்போய்த் தலைமகள் வந்துழி, தாய் சுற்றத்தார்க்குச் சொல்லியது. 4 | | |
|
|
395 | | முளி வயிர்ப் பிறந்த, வளி வளர் கூர் எரிச் | | சுடர் விடு நெடுங் கொடி விடர் முகை முழங்கும் | | இன்னா அருஞ் சுரம் தீர்ந்தனம்; மென்மெல | | ஏகுமதி வாழியோ, குறுமகள்! போது கலந்து | 5 | கறங்கு இசை அருவி வீழும், | | பிறங்கு இருஞ் சோலை, நம் மலை கெழு நாட்டே. | |
| உடன்போய் மீள்கின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. 5 | | |
|
|
396 | | புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின் | | கதுப்பு அயல் அணியும் அளவை, பைபயச் | | சுரத்திடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை! | | கல் கெழு சிறப்பின் நம் ஊர் | 5 | எல் விருந்து ஆகிப் புகுகம், நாமே. | |
|
|
|
397 | | 'கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை | | குருளைப் பன்றி கொள்ளாது கழியும் | | சுரம் நனி வாராநின்றனள்' என்பது | | முன்னுற விரைந்த நீர் மின் | 5 | இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே. | |
| உடன்போய் மீள்கின்ற தலைமகள் தன் ஊர்க்குச் சொல்கின்றாரைக் கண்டு கூறியது. 7 | | |
|
|
398 | | 'புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி, | | மட மான் அறியாத் தட நீர் நிலைஇ, | | சுரம் நனி இனிய ஆகுக!' என்று | | நினைத்தொறும் கலிழும் என்னினும் | 5 | மிகப் பெரிது புலம்பின்று தோழி! நம் ஊரே. | |
| தலைமகள் மீண்டு வந்துழி, அவட்குத் தோழி கூறியது. 8 | | |
|
|
399 | | 'நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும், | | எம் மனை வதுவை நல் மணம் கழிக' எனச் | | சொல்லின் எவனோ மற்றே வென் வேல், | | மை அற விளங்கிய கழல்அடி, | 5 | பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே? | |
| உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக்கொண்டு புக்குழி, 'அவன் தாய் அவட்குச் சிலம்பு கழி நோன்பு செய்கின்றாள்' எனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குச் சொல்லியது. 9 | | |
|
|
400 | | மள்ளர் அன்ன மரவம் தழீஇ, | | மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும் | | அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில், | | 'காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய் கழல் | 5 | வெஞ் சின விறல் வேல் காளையொடு | | இன்று புகுதரும்' என வந்தன்று, தூதே. | |
| உடன்போய் வதுவை அயரப்பட்ட தலைவி, 'தலைவனோடு இன்று வரும்' எனக் கேட்ட செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. 10 | | |
|
|