91 | | நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து | | வெறி மலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும் | | கழனி ஊரன் மகள் இவள்; | | பழன வெதிரின் கொடிப் பிணையலளே. | |
| குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள் விளைவு இலள்' எனச் சேட்படுத்தது. 1 | | |
|
|
92 | | கருங் கோட்டு எருமைச் செங் கண் புனிற்று ஆ | | காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் | | நுந்தை, நும் ஊர் வருதும் | | ஒண் தொடி மடந்தை! நின்னை யாம் பெறினே. | |
| 'நினக்கு வரைந்து தருதற்குக் குறை நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினால் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் செ | | |
|
|
93 | | எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென, | | பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா, | | செய்த வினைய மன்ற பல் பொழில் | | தாது உண் வெறுக்கைய ஆகி, இவள் | 5 | போது அவிழ் முச்சி ஊதும் வண்டே. | |
| முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. 3 | | |
|
|
94 | | மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை | | மகளிர் அன்ன துணையொடு வதியும் | | நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே | | கழனித் தாமரை மலரும், | 5 | கவின் பெறு சுடர்நுதல் தந்தை, ஊரே. | |
| வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீள்கின்றான் சொல்லியது. 4 | | |
|
|
95 | | கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ, | | நெடுங் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் | | புனல் முற்று ஊரன், பகலும், | | படர் மலி அரு நோய் செய்தனன், எமக்கே. | |
| உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கி, பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. 5 | | |
|
|
96 | | அணி நடை எருமை ஆடிய அள்ளல், | | மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் | | கழனி ஊரன் மகள், இவள்; | | பழன ஊரன் பாயல் இன் துணையே. | |
| பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள் தம்முள்ளே சொல்லியது. 6 | | |
|
|
97 | | பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக் | | கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம், | | பொய்கை, ஊரன் மகள், இவள்; | | பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே. | |
| புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், 'உளது' என்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண், தன்னுள்ளே சொல்லியது. 7 | | |
|
|
98 | | தண் புனல் ஆடும் தடங் கோட்டு எருமை | | திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர! | | ஒண் தொடி மட மகள் இவளினும் | | நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே? | |
| புறத்தொழுக்கம் உளது ஆகிய துணையானே புலந்து வாயில் நேராத தலைமகள் கொடுமை தலைமகன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது. 8 | | |
|
|
99 | | பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை, | | கழனி எருமை, கதிரொடு மயக்கும் | | பூக் கஞல் ஊரன் மகள், இவள்; | | நோய்க்கு மருந்து ஆகிய பணைத் தோளோளே. | |
| தோழி முதலாயினோர் தலைமகன் கொடுமை கூறி விலக்கவும் வாயில் நேர்ந்துழி, அவன் உவந்து சொல்லியது. 9 | | |
|
|
100 | | புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை, | | மணல் ஆடு சிமையத்து, எருமை கிளைக்கும் | | யாணர் ஊரன் மகள், இவள்; | | பாணர் நரம்பினும் இன் கிளவியளே. | |
| வாயில் நேர்தற்பொருட்டு முகம்புகுவான் வேண்டி இயற்பழித்துழி, தலைமகள் இயற்பட மொழிந்த திறம் தலைமகற்குத் தோழி சொல்லியது. 10 | | |
|
|