| 148. எக்கர் ஞாழ லிகந்துபடு பெருஞ்சினை வீயினிது கமழுந் துறைவனை நீயினிது முயங்குமதி காத லோயே. | எ-து களவொழுக்கத்தின் ‘விளைவறியாது அஞ்சிய வருத்தம் நீங்கக் கரணவகையான் வதுவை முடித்தபின்பு தலைமகளைப் பள்ளி யிடத்து உய்க்கும் தோழி சொல்லியது. (ப-ரை.) ‘எக்கர்ஞாழல்..............கமழுந்துறைவன்? என்றது அவன் அன்பு இதன்மேல் இல்லையென வளர்ந்து பயன்பட்டதிறம் கூறியவாறு. குறிப்பு. இகத்தல்-கடத்தல், சினை-கிளை, வீ-மலர். காதலோய் என்றது தலைவியை, காதலோய்! துறைவனை இனிது முயங்குமதி. மதி : முன்னிலையசை. கரணம்-மணச்சடங்கு. (மேற்,) மு. களவுக்காலத்துக்குட்பட்ட வருத்தம் நீங்கினமை கூறுங்கால் தோழிக்குக் கூற்று நிகழும் (தொல். கற்பு, 9, ந) (பி-ம்.) 1 ‘விளைவறிவது? ( 8 ) | |