எ-து பகற்குறிக்கண் வந்துநீங்கும் தலைமகனைத் தோழி
எதிர்பட்டு மனைக்கண் நிகழ்ந்ததுகூறிச் 1செறிப்பறிவுறீஇ வரைவு
கடாயது.
குறிப்பு. கோடறுத்த-சங்கை அறுத்துச் செய்யப்பட்ட,
மடவரற் கண்டிகும்-தலைவியைக் கண்டோம். நன்னுதல் மால்
செய்தென-நல்ல நுதல் புதிய நறுநாற்றத்தால் மயக்கத்தைச்
செய்ய. கடுத்தனள்-ஐய முற்றனள்.
(பி-ம்.) 1 ‘செறிப்பறீஇ வரைவு’ ( 4 )