எ-து தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை
கண்டு சொல்லியது.
குறிப்பு. தெளிர்ப்ப-ஒலிக்க. அலவன்-நண்டை. ஆட்டி-
அலைத்து விளையாடி. அலவனாட்டல் : பட். 101; நற். 363 : 10;
குறுந். 303 : 7. முகம் புதை கதுப்பினள்-முகத்தை மறைத்த கூந்
தலையுடையவள். புலம்புகொள்மாலை-தனிமையைக் கொண்ட
மாலைக் காலம்; குறுந். 314 : 3. நின்றோள் மாலை மறைய எனக்கு
ஆகம் நல்குவள்.
(மேற்.) மு. இடந்தலைப் பாட்டில் தலைவி நிலைகண்டு கூறியது ;
இது திணை மயக்குறுதலுள் நெய்தலிற் புணர்தல் நிமித்தம் (தொல்.
அகத். 12, ந.). தலைவன் இவ்விடத்து இவ்வியற்றென்றல் (நம்பி.
களவு. 21)
(பி-ம்.) 1 ‘ளாயத்து நின்றோளே’ ( 7 )