எ-து பரத்தையர் மனைக்கட் பன்னாள் தங்கிப் பின்பு ஆற்றா
மையே வாயிலாக வந்த தலைமகனை எதிர்ப்பட்ட தோழி தலை
மகட்குச் சொல்லியது.
(ப-ரை.) குறுந்துறை வினவிநின்ற நெடுந்தோளண்ணல்
என்றது களவுக் காலத்து நிகழ்ந்ததனைக் கூறிற்று ; தலைமகள்
புலவி நீங்குதற்கும் யான் நெடுநாட்பிரிந்தமை கூறுகின்றவா
றென்று அவன் வருந்துதற்குமெனக் கொள்க.
குறிப்பு. இளையர்-இளம்பெண்டிர். குறுந்துறை-சிறிய நீர்த்
துறையை, அண்ணல்-தலைவனை. கண்டிகும்-கண்டோம். யாம்
அண்ணலைக் கண்டிகும்.
(மேற்.) மு. தலைவன் புணர்ச்சியுண்மையறிந்து தாழநின்ற
தோழி தானுங் குறையுற்றுத் தலைவிமாட்டுச் செல்லுதற்கண் கூற்று
நிகழும் (தொல். களவு, 24, இளம்.). பாங்கியிற் கூட்டத்துள்
தலைவன் இரந்து பின்னின்றமை கண்டு தோழி மனம் நெகிழ்ந்து
தான் குறைந்து தலைவியிடத்தே சென்று குறை கூறுதல் (தொல்.
களவு. 23, ந). பாங்கி இறையோற் கண்டமை பகர்தல் (நம்பி.
களவு. 31) ; இ. வி. 509.
(பி-ம்.) 1‘வளையறை’ 2‘றின்னகை’ 3‘விருந்தென வினவி’
4 ‘நெடுந்தேரண்ணல்’ ( 8 )