27

(3) 1களவன் பத்து


27. 1செந்நெலஞ் செறுவிற் கதிர்கொண்டு களவன்
   தண்ணக மண்ணளைச் செல்லு மூரற்
   கெல்வளை நெகிழச் சாஅய்
   அல்ல லுழப்ப தெவன்கொ லன்னாய்.

   எ-து தலைமகள் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி,
‘புறத்தொழுக்கம் உளதாயிற்று’ 2எனக்கருதி வருந்தும் தலைமகட்குத்
தோழி சொல்லியது.

  குறிப்பு. செறுவில்-வயலில். கதிர்-நெற்கதிரை. தண்ணகமண்
அளை-தண்மையாகிய உள்ளிடத்தையுடைய மண்ணாலாகிய;
வளையுள்; ஐங். 30;2, எல்வளை-ஒளிபொருந்திய வளைகள், சாஅய்
மெலிந்து; “ஒண்டொடி நெகிழ்ச் சாய்” (ஐங். 28:3); குறுந். 50:4,
125:1; அகநா. 127 : 1. அல்லல் உழப்பது-துன்பத்தால் வருந்து
வது.

  (மேற்.) மு. ‘புறத்தொழுக்கத்தை உடையவனாகிய தலைவன்
மாட்டு மனம் வேறுபட்ட தலைவியை, புறத்து ஒழுக்கமின்றி நின்
மேல் அவர் அன்புடையரென அவ்வேறுபாடு நீங்கத் தோழி நெருங்
கிக் கூறியது. இதன் உள்ளுறையாற்பொருள் உணர்க’ (தொல்.
கற்பு. 9. .). ‘கதிர் ..... செல்லுமூரன்’ என்பதற்கு உள்ளுறைப் பொ
ருளாவது வேண்டிய பொருள்களைத் தொகுத்துக் கொண்டு இல்
லிற்கு வருவான் என்பது.

 (பி-ம்.) 1 ‘செந்நெற் செறுவின்’ 2 ‘எனமாட்டக்கருதி’     ( 7 )

  ்