எ-து நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
(ப-ரை.) அலங்கு.......... நாடனென்றது இவள் மேல்வைத்த
தண்ணளி நம்மிடத்தும் வந்து இடையறாது ஒழுகும் எ-று.
குறிப்பு. . அகன்கண் அருவி-அகன்ற இடத்தையுடைய அருவி.
கழை அடுக்கத்து-மூங்கிலையுடைய பக்கமலையில். அருவி உவமை
இடையறாமைக்கு; ஐங். 228. திருவிறல் வியல் மார்பு-அழகிய
வெற்றியையுடைய பரந்த மார்பை. கலிழும்-கலங்கும்.
(மேற்). மு. அறத்தொடு நிலையில் உண்மை செப்பல் (தொல்.
களவு. 24, இளம்.) தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்த
வழித்தோழி அறத்தொடு நிலையாற் கூறும்; அறத்தொடு நிலையில்
உண்மை செப்பல் இது (தொல். களவு. 23; பொருள். 13, ந.).
(பி-ம்.) 1 ‘அல்கன்மழை? ( 10 )
(22) அன்னாய்ப்பத்து முற்றிற்று.