எ-து இற்செறிப்புணர்ந்த தலைமகள் ஆற்றாளாய்த் தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. மணிநிறங்கொண்ட மாமலை : ஐங். 207 : 4, குறிப்பு.
வெற்பில்-பக்க மலையில். துணிநீர்-தெளிந்த நீர். அவர்க்கு-தலை
வனுக்கு. அவர்க்கு நம்மோடு அருவியாடல் எளிய மன் ; மன் : ஒழி
யிசைப் பொருளில் வந்தது. தலைவனோடு தலைவி அருவியாடல் :
குறுந். 353 : 1-3. அரியவாகுதல்-இச்செறிப்பினால் அரியது ஆகு
தலின். யான் மருண்டனென். ( 4 )