எ-து ‘நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தளல்லள்’
என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
குறிப்பு. தண்டழைக் கொடிச்சி-குளிர்ந்த தழையையணிந்த
குறத்தி; குறிஞ்சிநிலத் தலைவி. முளைவாள் எயிற்றள்-முளைபோன்ற
ஒள்ளிய பல்லினள். அணங்கினள்-பிறரை வருத்தும் தன்மையினள்.
அடி, 3-4 : குறுந். 119 : 3-4.
(மேற்). மு. தோழி தலைமகனது இளமைப் பண்பு கூறிப்பெயர்த்த
வழித் தலைமகன் கூறியது (தொல். களவு. 12 இளம்,) தலைவி
வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது (தொல்.
அகத். 21; களவு. 12, ந.) தலைவன் பாங்கியிடம் தலைவி வருத்திய
வண்ணம் உரைத்தல் (நம்பி, களவு 30.)
(பி-ம்.) 1 ‘முளைவாய் வாளெயிற் றிளையள்’, ‘முளைவாயெயிற
்றள்’ 2‘மன்னணங்கினளே ( 6 )