எ-து வரைவுவேண்டிவிட மறுத்துழித் தமர்க்குரைப்பாளாய்
வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி அவன் மலைகாண்
டலே பற்றாகத் தாங்கள் உயிர்வாழ்கின்றமை தோன்றச் சொல்லியது.
குறிப்பு. மயிலன்ன நடை : முருகு. 205 : திருச்சிற், 224.
கொடிச்சி-குறிஞ்சி நிலத்தலைவி. அசைநடைக் கொடிச்சி : குறுந். 182
: 6; குறள், 1098. கொடுத்தனெம் ஆயினோ-கொடுத்தோமானால்.
ஓ : அசை. இன்னும்-வரைவு வேண்டிவிடுத்தலைக் கண்டபின்னும்.
ஆனாது-அமையாது. நன்னுதல்-தலைவியது. துயர் ஆனாது;
வரையுமாயிற் கொடுத்தனெமாயின் நன்று.
(மேற்) மு, த லைவனது வரைவை மறுத்துழித் தோழி கூறியது
(தொல், களவு. 24, இளம்.; 23, ந.) ( 8 )