எ-து ‘வரைந்துகொள்ள நினைக்கிலன்? என்று வேறுபட்ட தலை
மகள், ‘அவன் நின்மேல் விருப்பமுடையன். நீ நோகின்றது
என்னை?? என்ற தோழிக்குச் சொல்லியது.
(ப-ரை) சிறுதினை மேய்ந்த தறுகட்பன்றி துறுகல் அடுக்கத்துத்
துணையொடு வதியும் நாடனென்றது களவொழுக்கத்தான் வரும்
சிற்றிம்பமின்றியே வரைந்துகொண்டு நின்னோடு ஒழுகுவனெனத்
தோழி கூறியவதனைத் தலைமகள் கொண்டு கூறிற்றெனக்கொள்க.
குறிப்பு. துறுகல் அடுக்கத்து-நெருங்கிய மலையினது பக்கமலை
யில், துணையொடு - பெண் பன்றியொடு, வதியும் - தங்கும். வரூஉம்-
வருவான். மருந்தும் - பரிகாரமும். அவன் விருப்பு மருந்தும் அறி
யுங்கொல்.
(மேற்) மு. தலைவி வருந்தியவழி, ‘நீ வருந்தாதி; தலைவன்
நின்மாட்டு அன்பு பெரிதுடையன்? எனத் தோழி ஆற்றுவித்தவழி
அவள் ஆற்றாமையாற் கூறியது. (தொல். களவு. 21, இளம்.) ( 2 )